மீட்டியோர் 350-ல் டியூப்லெஸ் ஸ்போக் வீலுடன் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு | Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிரபலமான நீண்ட தொலைவு பயணத்துக்கான க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளாக விளங்கும் மீட்டியோர் 350-ல் கூடுதலாக சன்டவுன்னர் ஆரஞ்ச் என்ற பிரத்தியேகமான நிறத்துடன் அலுமினியம் டியூப்லெஸ் ஸ்போக் வீல் பெற்றுள்ளது.

என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து மீட்டியோர் 350ல் 349cc ஒற்றை சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 6,100 rpm-ல் 20.2 bhp பவர், 27 Nm டார்க் 4,000 rpmல் இந்த மாடலில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டு சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றுள்ளது.

ஸ்போக் வீல்களில் டியூப் டயர்கள் இருந்ததால், பஞ்சர் ஏற்பட்டால் அதனைச் சரிசெய்வது சவாலாக இருந்ததை சமாளிக்க அலுமினியத்தால் ஆன டியூப்லெஸ் ஸ்போக் வீல் இந்த புதிய ‘சன்டவுனர் ஆரஞ்சு’ எடிஷனில், டீலக்ஸ் டூரிங் சீட் அதிக குஷனுடன் வடிவமைக்கப்பட்டு, பல மணி நேர ஓட்டத்திற்குப் பின்னும் சோர்வின்றி பயணிக்க உதவுகிறது. பின்னால் அமர்பவரின் வசதிக்காக பேக்ரெஸ்ட் உள்ளது.

மற்ற வசதிகளில் Retro CTG உடன் சிறப்பு பேட்ஜிங், Tripper Pod, எல்இடி ஹெட்லைட், இன்டிகேட்டர், USB Type-C Fast சார்ஜிங், மற்றும் விண்ட்ஸ்கீரின் உள்ளது.

2,000 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ள இந்த மாடலில், நீண்ட தொலைவு ஹைவே பயனங்களுக்கு ஏற்றதாகவும் ரெட்ரோ டிசைனுடன் எதிர்பார்த்த தொழில்நுட்ப சார்ந்த அம்சங்களுடன் (Sundowner Orange) என்ற பிரத்யேகமான லிமிடெட் எடிஷன் மாடலை ₹2,18,882 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.