Aval Awards: "இனியா வாய்ஸ்ல பவதாரணி எப்பவுமே இருப்பாங்க" – ரோஜா நெகிழ்ச்சி!

விகடனின் அவள் விருதுகள் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் வைரல் ஸ்டார் விருதைப் பெற்றார் இனியா ராஜகுமாரன்.

யார் இந்த இனியா ராஜகுமாரன்?

தமிழ்நாட்டின் சமீபத்திய செல்லக் குரல்… இனியா ராஜகுமாரன். Zee தமிழ் சரிகமப நிகழ்ச்சியின் போட்டியாளரான இந்தக் கல்லூரி மாணவி, நடிகை தேவயானி – இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியின் மகள். பெற்றோரின் புகழை தனது விசிட்டிங் கார்டு ஆக்க விரும்பாத செல்ஃப் மேடு டேலன்ட். கர்னாடக சங்கீதம், கீ போர்டு, பியானோ, பரதம், சிலம்பம், சுருள் வாள் வீச்சு, கத்திச் சண்டை, நெருப்புப் பந்தம் என இவர் கற்றுள்ள கலைகள் பல.

இனியா ராஜகுமாரன்

போட்டி மேடையில் ‘மயில்போல பொண்ணு ஒண்ணு’ பாடலை குயில்போல பாடியவரை, தமிழ் மக்கள் தங்கள் வீட்டு இசை மகளாக வாரியணைத்துக் கொண்டனர். சிறப்பான பாடல் தேர்வு, எளிமையான ஆடைகள், பாந்தமான பேச்சு என ஒவ்வொரு சுற்றிலும் மில்லியன் வியூவ்ஸ்களை அள்ளினார். போட்டியாளர் இனியா, பாடகி இனியாவாக ஒளிரத் தொடங்கினார்.

“நான் கோலங்கள் சீரியல்போதுதான் பிறந்தேன்”

அரசியல்வாதியும் நடிகையுமான ரோஜா கையில் விருதுபெற்ற இனியா ராஜகுமாரன், “ரோஜா ஒரு பவர்ஃபுல்லான வுமன். அவங்க கிட்ட இருந்து அவார்ட் வாங்கினதில் ரொம்ப ஹேப்பி.

விகடனுக்கும் எங்க குடும்பத்துக்கு நீண்டநாள் தொடர்பு இருக்கு. நான் கோலங்கள் சீரியல்போதுதான் பிறந்தேன். அந்த சீரியலைத் தயாரித்தது விகடன். ரியாலிட்டி ஷோ முடிச்சிட்டு வந்து முதல் விருது வாங்குறேன். மென்மேலும் பெருமைப் படுற அளவுக்கு முன்னேறுவேன்” எனப் பேசினார்.

தேவயாணி, இனியா, ரோஜா
தேவயாணி, இனியா, ரோஜா

“இனியா வாய்ஸ்ல பவதாரணி எப்பவுமே இருப்பாங்க”

இனியாவுக்கு விருது கொடுத்தது குறித்து பேசிய ரோஜா, “எனக்கு இனியாவ பார்த்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏன்னா என்னோட பொண்ணு, தேவயானி பொண்ணுங்க, மீனாவுடைய பொண்ணு, நம்ம ரம்பா எல்லாரோட பசங்க குட்டி வயசுல பர்த்டேஸ்ல நாங்க மீட் பண்ணுவது உண்டு. திடீர்னு பார்த்தா வைரல் ஸ்டார் நீங்க அவார்ட் கொடுக்கணும்னு நீங்க சொன்னதும் நான் ஷாக். இவ்வளவு வளர்ந்துட்டாங்களான்னு.

ஏன்னா தேவயானி ஒரு ஆர்ட்டிஸ்ட், ஹீரோயின். அவங்க ஹஸ்பண்ட் வந்து டைரக்டர். சோ இவங்க ஒரு டைரக்டரா ஒரு ஹீரோயினா ஆவாங்கன்னு நினைச்சேன். திடீர்னு பார்த்தா ஒரு புது இது சிங்கர் ஆயிட்டாங்க. அதும் அந்த சாங், பவதாரணி சாங் ‘மயில் போல ஒரு பொண்ணு’ அந்த சாங் பாடும்போது வைரல் ஆயிட்டாங்க தமிழ்நாட்டுக்குள்ள.

ஏன் அந்த சாங், அந்த வாய்ஸ் எனக்கு பிடிக்கும்னா, என்னுடைய சூப்பர் ஹிட் சாங் மஸ்தான மஸ்தான பாடினது பவதாரணிதான். சோ, அவங்க இல்லங்கிற குறை இனிமே இல்லை. இனியா வாய்ஸ்ல பவதாரணி எப்பவுமே இருப்பாங்கன்னு நான் நினைக்கிறேன். அண்ட் தேவயானி மாதிரி, ராஜ்குமார் மாதிரி, இனியா கூட இன்ண்டஸ்ட்ரில ஒரு ரவுண்ட் வரணும்னு நான் பிளஸ் பண்ணி இருக்கேன்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.