’முட்டாள்தனத்தின் உச்சம்’ கவுதம் கம்பீரை விளாசி தள்ளிய ரவிசாஸ்திரி

Ravi Shastri : இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி மோசமாக விளையாடிக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தோற்ற நிலையில், 2வது போட்டியிலும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. கவுகாத்தியில் நடைபெறும் இப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி 201 ரன்களுக்கு சுருண்டது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் பேட்டிங்கில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் குழப்பமே காரணம். பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பிளேயர்களை இஷ்டத்துக்கு விளையாட வைக்கிறார். அவரின் அணுகுமுறையால் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

Add Zee News as a Preferred Source

ரவிசாஸ்திரி விமர்சனம்

இதனை இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கமெண்டரியில் பேசிய அவர், பேட்டிங்கில் இந்தியா கடைபிடிக்கும் அணுகுமுறை அர்த்தமற்றதாக இருப்பதாக தெரிவித்துள்ளார். பேட்ஸ்மேன்களின் ஆர்டர் ஏன் அடிக்கடி மாற்றப்படுகிறது, அதனால் என்ன ரிசல்ட் கிடைத்திருக்கிறது என கேள்விகளை எழுப்பியுள்ள அவர், இந்தியா விளையாடும் போட்டிகளின் முடிவுகளை பார்த்தாலே பேட்டிங் ஆர்டர் மாற்றத்தில் இந்தியா கடைபிடிக்கும் அணுமுறை எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது என ரவிசாஸ்திரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய அணியின் பேட்டிங்கில் குழப்பம்

கவுகாத்தியில் நடக்கும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கை குறிப்பிட்டு பேசிய அவர், “சமீப காலங்களில் 3வது இடத்தில் பல வீரர்களை வைத்து இந்திய அணி பரிசோதித்து. முதல் டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் அந்த இடத்திற்கு  கொண்டு வரப்பட்டார். ஆனால், இரண்டாவது போட்டிக்கு, சாய் சுதர்சன் அணிக்குத் திரும்பி, மீண்டும் அந்த இடத்தைப் பிடித்தார். முதல் போட்டியில் 3வது இடத்தில் பேட்டிங் செய்த வாஷிங்டன் சுந்தரை 8வது இடத்திற்கு இறக்கப்பட்டார். இந்த மறுசீரமைப்பு இந்தியாவின் நலனுக்கு சிறிதும் உதவவில்லை.” என ரவிசாஸ்திரி தெரிவித்தார்.

அர்த்தமற்ற அணுகுமுறை

தொடர்ந்து பேசிய அவர், “இந்திய அணியின் அணுகுமுறை முற்றிலும் அர்த்தமற்றது. என்னால் ஒரு காரணத்தை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படியே செய்தால் குழப்பமே ஏற்படும். கொல்கத்தாவில் நீங்கள் நான்கு சுழற்பந்து வீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்தீர்கள். அதற்கு பதிலாக ஒரு நல்ல பேட்ஸ்மேனை அணிக்குள் சேர்த்திருக்கலாம். கடந்த டெஸ்டில் வாஷிங்டனை மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வைத்த பிறகு, அந்த இடத்தில் விளையாடக்கூடிய இன்னொரு பிளேயர் இருந்தால் அவரை இப்போட்டியில் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வைத்திருக்கலாம்.” என ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

இந்தியா தென்னாப்பிரிக்கா போட்டி அப்டேட்

கவுகாத்தி பர்சபரா ஸ்டேடியத்தில் இன்று 4வது நாள் ஆட்டம் நடக்கிறது. தென்னாப்பிரிக்கா அணி இப்போது வரை இந்திய அணி 314 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த சூழலில் பார்த்தால் தென்னாப்பிரிக்கா அணியின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் என்பதால், இப்போட்டி டிரா ஆனால் கூட தென்னாப்பிரிக்கா அணியே இந்த தொடரை கைபற்றும். இது இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

About the Author


Karthikeyan Sekar

I am Karthikeyan, a Senior Sub-Editor at Zee Tamil News Channel, bringing 10 years of experience in the media industry. I have extensive experience working in both news television and online website platforms.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.