ஈரோடு: ஈரோடு மொடக்குறிச்சியில் ரூ.4.9 கோடியில் அமைக்கப்பட்ட பொல்லான் சிலையுடன் கூடிய நினைவு மண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தீரன் சின்னமலையின் படைத்தளபதியும் சுதந்திர போராட்ட வீரருமான மாவீரன் பொல்லானின் சிலை திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சொன்னால் சொன்னதை செய்வேன் என்பதற்கு சாட்சி தான் பொல்லான் சிலை என்றார். இரண்டு நாள் பயணமாக கோவை ஈரோடு மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் ரூ.208.50 கோடி மதிப்பிலான […]