வட இந்தியாவில் வகுப்பறைக்கு மாணவன் ஒருவன் ஐபோன் பாக்ஸில் மதிய உணவு எடுத்து வந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வழக்கமாக மாணவர்கள் ஸ்டீல் பாக்ஸ் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில் தான் மதிய உணவு கொண்டு வருவார்கள். ஆனால், ஒரு மாணவன் செய்த காரியம் ஆசிரியரையே குழப்பத்தில் ஆழ்த்தியது.
வைரலாகும் வீடியோவின்படி, வகுப்பறையில் ஒரு மாணவன் ‘ஆப்பிள் ஐபோன்’ பாக்ஸ் வைத்திருப்பதை ஆசிரியை கவனித்துள்ளார். அந்த மாணவன் கையில் வைத்திருந்த பாக்ஸை பார்த்து “இதற்குள் என்ன இருக்கிறது?” என்று ஆசிரியர் கேட்டார்.

அதற்கு அந்த மாணவன் எந்தவித பதட்டமும் இல்லாமல், இது என்னுடைய லஞ்ச் என்று பதிலளித்தான். இதை கேட்டு ஆசிரியர் அதிர்ச்சியடைந்து. ”என்னது லஞ்சா? திற பார்க்கலாம்” என்று கேட்டிருக்கிறார்.
வகுப்பறையில் இருந்த மற்ற மாணவர்களும் ஆவலுடன் அந்த பாக்ஸை எட்டிப்பார்த்தனர்.
ஆசிரியர் சொன்னதை கேட்டு, அந்த மாணவன் ஐபோன் பாக்ஸை திறந்தான். உள்ளே பார்த்தால், மொபைல் போனுக்கு பதிலாக சப்பாத்திகள் பேப்பரில் மடித்து வைக்கப்பட்டிருந்தன.
இதனை பார்த்த ஆசிரியர் இதை யார் உனக்கு பேக் செய்து கொடுத்தது? இது பார்ப்பதற்கு சாப்பாட்டு டப்பா மாதிரியா இருக்கிறது? என்று கிண்டலாக கேட்க, “இதை நான் தான் பேக் செய்தேன்” என்று அந்த மாணவன் கூறியது வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.