Anirudha Srikkanth – Samyuktha Shan Marriage: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. சீசன் 4ல் பங்கேற்று விளையாடிய இவர் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இதன் பின்னர் அவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தன. காபி வித் லவ், துக்ளக் தர்பார், மைடியர் பூதம், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். மேலும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
Add Zee News as a Preferred Source
Anirudha Srikkanth Marriage: இரண்டாவது திருமணம் செய்துக்கொண்ட சிஎஸ்கே வீரர்
சம்யுக்தா ஆரம்ப கட்டத்தில் விளம்பர மாடலாக தனது திரைத்துறை பயணத்தை தொடர்ந்தார். 2007ஆம் ஆண்டில் மிஸ் சென்னை பட்டத்தை வென்றவர். இந்த நிலையில், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த்தின் மகன் அனிருத்தாவை கரம் பிடித்திருக்கிறார். இவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும். நடிகை சம்யுக்த்தா குறும்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான கார்த்திக் சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இருவருக்கும் ஒரு மகனும் பிறந்தார். இந்த சூழலில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
Anirudha Srikkanth Marriage: அனிருத்தா – சம்யுக்த்தா திருமணம்
கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா முதலில் கடந்த 2012ஆம் ஆண்டு ஆர்த்தி வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் இருவருக்கும் நினைத்தபடி செட் ஆகாததால், இருவரும் விவாகரத்து செய்தனர். இந்த சூழலில், அனிருத்தா மற்றும் சம்யுக்த்தா இருவரும் நெருங்கி பழகிய வந்தனர். சமீபமாக இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருக்கின்றனர் என்ற பேச்சுக்கள் சென்றுக்கொண்டிருந்த நிலையில், இன்று (நவம்பர் 27) திருமணம் செய்துக்கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Anirudha Srikkanth Marriage: ரசிகர்கள் வாழ்த்து
அனிருத்தா முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஆவார். அவர் ஹைதராபாத் அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார். ஐபிஎல்லில் மொத்தம் 20 போட்டிகளில் விளையாடி 136 ரன்கள் எடுத்தார். 2011 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 64 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராகும். நடிகை சம்யுக்த்தா மற்றும் அனிருத்தா ஸ்ரீகாந்த் திருமணம் செய்துக்கொண்ட நிலையில், அவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
About the Author
R Balaji