பெங்களூரு,
கர்நாடக மாநில கனிமவளத்துறை நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி மகாந்தேஷ் பிலாகி. இவர் பெங்களூரு மின்வாரிய நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
இதனிடையே, ஐஏஎஸ் அதிகாரி மகாந்தேஷ் பிலாகி நேற்று தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றுள்ளார். விஜயபுரத்தில் இருந்து கலபுரகி நோக்கி சென்ற அந்த காரில் மகாந்தேஷ் பிலாகி அவரது உறவினர்கள் என 3 பேர் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், கலபுரகி மாவட்டம் கவுனஹில் பகுதியில் சென்றப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஐஏஎஸ் அதிகாரி மகாந்தேஷ் பிலாகி உள்பட காரில் பயணித்த 3 பேரும் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.