தென்னாப்பிரிக்காவிடம் ஒயிட்வாஷ்! கேப்டன் சுப்மன் கில் எடுத்த முக்கிய முடிவு!

இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்து மீண்டும் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. இந்த மோசமான தோல்வியால் துவண்டு போயுள்ள இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், காயம் காரணமாக விலகியிருந்த கேப்டன் சுப்மன் கில் சமூக வலைத்தளத்தில் ஒரு உருக்கமான செய்தியை பகிர்ந்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கௌஹாத்தியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி சந்தித்த மிக மோசமான தோல்வியாகும். இதன் மூலம், 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க அணி ஒரு டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்த தோல்வி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமின்றி, வீரர்களையும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

Add Zee News as a Preferred Source

Calm seas don’t teach you how to steer, it’s the storm that forges steady hands. We’ll continue to believe in each other, fight for each other, and move forward – rising stronger. 

— Shubman Gill (@ShubmanGill) November 26, 2025

கேப்டன் கில்லின் வரிகள்

முதல் டெஸ்ட் போட்டியில் கழுத்து வலி காரணமாக பாதிக்கப்பட்ட சுப்மன் கில், இரண்டாவது போட்டியிலும் விளையாடவில்லை. அணியின் இந்த சரிவை கண்டு மனம் வருந்திய அவர், தனது X தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “அமைதியான கடல் ஒருபோதும் சிறந்த மாலுமியை உருவாக்குவதில்லை; புயல் தான் உறுதியான கைகளை உருவாக்குகிறது. நாங்கள் தொடர்ந்து ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைப்போம், ஒருவருக்கொருவர் போராடுவோம், மேலும் வலிமையுடன் முன்னேறுவோம்,” (Calm seas don’t teach you how to steer, it’s the storm that forges steady hands…) என்று பதிவிட்டுள்ளார். இந்த தோல்வியை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, அணியினர் அனைவரும் ஒற்றுமையுடன் மீண்டு வர வேண்டும் என்பதே அவரது செய்தியின் சாராம்சமாக உள்ளது.

வரலாறு காணாத தோல்வி

தென்னாப்பிரிக்க அணி நிர்ணயித்த 549 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, கடைசி நாளில் வெறும் 140 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் 342 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே இதுவரை இந்தியாவின் பெரிய தோல்வியாக இருந்தது. அந்த சோக சாதனையை இந்த 408 ரன்கள் வித்தியாசத்திலான தோல்வி முறியடித்துள்ளது. கௌதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, இந்திய அணி சொந்த மண்ணில் சந்திக்கும் இரண்டாவது ‘ஒயிட்வாஷ்’ இதுவாகும். முன்னதாக நியூசிலாந்து அணியிடம் 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சிக்கல்

இந்த தொடர் தோல்வியால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC 2025-27) புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 5-வது இடத்திற்கு சரிந்துள்ளது. இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இனி வரும் போட்டிகள் அனைத்திலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. கில்லின் இந்த ஊக்கமளிக்கும் வார்த்தைகள், துவண்டு போயுள்ள இந்திய வீரர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அடுத்ததாக இந்திய அணி, இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களில் விளையாடவுள்ளது. அதில் சரிவிலிருந்து மீண்டு வருவார்கள் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.