சமையலர் பாப்பாள் தீண்டாமை வழக்கு: 6 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை; "திருப்தி இல்லை" – ப.பா.மோகன்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே அமைந்துள்ள திருமலைக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையலராகப் பணியாற்றி வந்தவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள்.

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி, இப்பள்ளியில் படிக்கும் ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர், பாப்பாளைச் சமைக்க விடாமல் தடுத்து நிறுத்தியதோடு, பள்ளி வளாகத்தைப் பூட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சாதிய ரீதியிலான இந்த வன்கொடுமை சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட முற்போக்கு இயக்கங்கள் இப்பிரச்னையை கையில் எடுத்தன.

பாப்பாளைச் சமையல் செய்யவிடாமல் தடுத்த அதே ஊரைச் சேர்ந்த ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த பழனிசாமி, சக்திவேல் உள்ளிட்ட 36 பேர் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பழனிசாமி, சக்திவேல் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை திருப்பூர் வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

பாப்பாள்
பாப்பாள்

இந்த வழக்கு விசாரணை மிகவும் மந்தமாக நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2024-இல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்தது.

இருதரப்பு சாட்சியங்கள் விசாரணை, அரசுத் தரப்பிலான விசாரணை முடிவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுவதாக நீதிபதி சுரேஷ் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 4 பேர் உயிரிழிந்த நிலையில், 32 பேர் மற்றும் பாதிக்கப்பட்ட பாப்பாள் ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பழனிசாமி, சக்திவேல், சண்முகம், துரைசாமி, சீதாலட்சுமி, வெள்ளியங்கிரி ஆகிய 6 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளித்த நீதிபதி சுரேஷ் மற்ற 26 பேரை விடுவித்து உத்தரவிட்டார்.

குற்றவாளிகளான பழனிசாமி, சக்திவேல், சண்முகம், துரைசாமி, சீதாலட்சுமி, வெள்ளியங்கிரி ஆகிய 6 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ் உத்தரவிட்டார்.

வழக்கறிஞர் ப.பா.மோகன்
வழக்கறிஞர் ப.பா.மோகன்

இந்த வழக்கு விசாரணை மிகவும் மந்தமாக நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2024-இல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்தது.

இருதரப்பு சாட்சியங்கள் விசாரணை, அரசுத் தரப்பிலான விசாரணை முடிவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுவதாக நீதிபதி சுரேஷ் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 4 பேர் உயிரிழிந்த நிலையில், 32 பேர் மற்றும் பாதிக்கப்பட்ட பாப்பாள் ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பழனிசாமி, சக்திவேல், சண்முகம், துரைசாமி, சீதாலட்சுமி, வெள்ளியங்கிரி ஆகிய 6 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளித்த நீதிபதி சுரேஷ் மற்ற 26 பேரை விடுவித்து உத்தரவிட்டார்.

குற்றவாளிகளான பழனிசாமி, சக்திவேல், சண்முகம், துரைசாமி,சீதாலட்சுமி, வெள்ளியங்கிரி ஆகிய 6 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ் உத்தரவிட்டார்.

திருப்தி இல்லை… மேல்முறையீடு செல்வோம்…

இந்த வழக்கில் பாப்பாள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒரு அரசுப் பணியாளரான பாப்பாள் பட்டியல் சமூகத்தினர் என்பதற்காகவே சமைக்கக் கூடாது என்று திட்டமிட்டே ஆதிக்கச் சமூகத்தினர் தடுத்துள்ளனர். இது முழுக்க முழுக்க அப்பட்டமான வன்கொடுமையாகும்.

இதற்கு அப்போதைய அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி மற்றும் காவல் துறையினர் உடந்தையாக இருந்துள்ளனர். பாப்பாளைப் பாதுகாக்க வேண்டிய மீனாட்சி, பாப்பாளைப் பணியிட மாறுதல் செய்துள்ளது சட்டத்திற்குப் புறம்பானதாகும். ஆனால், 36 ஆவது குற்றவாளியான வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சியை இந்த வழக்கில் இருந்து உயர் நீதிமன்றம் விடுவித்தது.

இந்த வழக்கை காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவி நிலையிலான அதிகாரிகள்தான் விசாரிக்க வேண்டும். அதிலும், அவர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த நுட்பமும், அறிவும் தெரிந்திருக்க வேண்டும் என்று சட்டத்தில் உள்ளது. ஆனால், பாப்பாள் வழக்கில் இந்த விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கவில்லை. அதனால், இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை.

பாப்பாள்
பாப்பாள்

இந்த வழக்கில் தொடர் விசாரணை கோரி, நீதிமன்றத்தில் மனு அளித்தோம். மனு அளித்த அன்றைய தினமே எங்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விசாரணையின்போது, ஆசிரியர்கள் பலர் பிறழ்சாட்சியாக மாறினர். இருப்பினும், சிறப்பு வழக்கறிஞர் பாண்டியன் வைத்த வாதங்களை முன்வைத்து நீதிமன்றம் 6 பேருக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதில், சட்டவிரோதமாக கூடுதல், சட்டவிரோதமாக ஒருவரைத் தடுத்து நிறுத்துதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம், சமூக ரீதியாக தொல்லை கொடுத்தது என்ற பிரிவுகளின்கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பில் பாதிக்கப்பட்ட பாப்பாளுக்கும், எங்களுக்கும் திருப்தி இல்லை. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.