சென்னை: தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பா.ஜ.க.வின் ‘ஸ்லீப்பர் செல்’ என திமு அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். த.வெ.க.வை பா.ஜ.க.வுக்கு இழுத்து வர வேண்டும் என்பது தான் செங்கோட்டையனுக்கு கொடுக்கப்பட்டுள்ள அசைன்மென்ட் என்றும் கூறியுள்ளார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன், தனது கோபிசெட்டிப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை நேற்று(புதன்கிழமை) ராஜிநாமா செய்தாா். இதனைத் தொடர்ந்து, சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வீட்டுக்கு நேற்று மாலை நேரில் சென்ற செங்கோட்டையன், விஜய்யை சந்தித்துப் […]