Sanju Samson & Rohan Kunnummal: இந்திய உள்ளூர் தொடர்களில் பிரபல தொடரான சயீத் முஸ்டாக் அலி தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று முன்தினம் (நவம்பர் 26) எலைட் குரூப் ஏ பிரிவு போட்டியில் கேரளா மற்றும் ஒடிசா அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கேரளா அணி பந்து வீச்சை தேர்வு செய்து. அதன்படி ஒடிசா அணி முதலில் பேட்டிங் செய்தது.
Add Zee News as a Preferred Source
CSK Sanju Samson: 177 ரன்கள் இலக்கு
20 ஓவர்கள் முடிவில் ஒடிசா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் 176 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் பிப்லாப் சமந்த்ரே 53, சம்பித் குமார் சவுரவ் பரல் 40 ரன்களையும் அடித்தனர். கேரளா அணி சார்பில் அதிகபட்சமாக நிதிஷ் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கேரளா அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும அவருடன் ரோஹன் குன்னும்மல் களமிறங்கினார். இந்த நிலையில்தான் சயீத் முஸ்டக் அலி டிராபியில் வரலாற்று சாதனை படைக்கப்பட்டது. சஞ்சு சாம்சன் மற்றும் ரோகன் குன்னும்மல் இருவரும் அதிரடியாக விளையாடினர். எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து பந்து வீச்சாளர்களை நிலைகுலைய வைத்தனர். இருவரும் சேர்ந்த ஒடிசா நிர்ணயித்த 177 ரன்கள் என்ற இலக்கை 16.3 ஓவர்களிலேயே எளிதாக எட்டினர். ரோகன் 60 பந்துகளில் 121 ரன்களை குவித்தார். மறுபக்கம் சஞ்சு சாம்சன் 41 பந்துகளில் 51 ரன்களை அடித்திருந்தார்.
CSK Sanju Samson: வரலாற்று சாதனையில் சஞ்சு சாம்சன்
இந்த நிலையில், சயீத் முஸ்தான் அலி டி20 போட்டியில் அதிக ரன்களை குவித்த தொடக்க ஜோடி என்ற வரலாற்று சாதனையை சஞ்சு சாம்சன் மற்றும் ரோகன் குன்னும்மல் படைத்தனர். முன்னதாக இதே தொடரில் குஜராத் அணியின் தொடக்க ஜோடியான உர்வில் பட்டேல் மற்றும் ஆர்யா தேசாய் 174 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது சாம்சன் மற்றும் ரோகன் ஆகியோர் முறியடித்தி இருக்கின்றனர்.
CSK Sanju Samson And Urvil patel சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி
சஞ்சு சாம்சன் இப்படியான ஒரு ஃபார்மில் இருப்பது சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டிரேடிங் முறையில் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டார். மறுபக்கம் மற்றொரு சிஎஸ்கே வீரர் உர்வில் பட்டேலும் 37 பந்தில் 119 ரன்களை அடித்திருப்பது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த ஆண்டில் சஞ்சு சாம்சன் மற்றும் உர்வில் பட்டேல் ஓப்பனிங்கில் ஆடினால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
About the Author
R Balaji