Ruturaj Gaikwad vs South Africa 2nd ODI: இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியுடன் விளையாடி வருகிறது. முதலில் டெஸ்ட் தொடரில் விளையாடிய அந்த அணி இந்திய அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. தற்போது இந்திய அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று (நவம்பர் 30) தொடங்கியது. இத்தொடரில் இருந்து காயம் காரணமாக சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் விலகியதால், கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சில வீரர்கள் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பி இருக்கின்றனர்.
Add Zee News as a Preferred Source
Ruturaj Gaikwad: முதல் போட்டியில் சொதப்பிய ருதுராஜ்
குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பி உள்ளார். இந்த சூழலில், அவருக்கு நேற்று ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியின் பிளேயிங் 11ல் இடம் அளிக்கப்பட்டு 4வது இடத்தில் இந்திய அணி நிர்வாகம் விளையாட வைத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 14 பந்துகளில் வெறும் 8 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். தற்போது அவருக்கு அடுத்த போட்டியில் மற்றொரு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது.
India vs South Africa 2nd ODI: அடுத்த இரண்டு போட்டியிலும் வாய்ப்பு வழங்க வேண்டும்
இந்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அவரது யூடியூப் சேனலில் கூறி உள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், என்ன நடக்கிறது என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் ஒருபோது 4வது இடத்தில் பேட்டிங் செய்தது கிடையாது. ஆனால் அவரை அந்த இடத்தில் விளையாட வைத்துள்ளனர். டெவால்ட் பிரெவிஸின் அற்புதமான கேட்ச் காரணமாக அவர் அவுட் ஆனார். அவருக்கு அடுத்த இரண்டு போட்டிளிலும் வாய்ப்பு கொடுங்கள் என கேட்டுக்கொள்கிறேன். அவர் சொர்ப்ப ரன்னில் ஆட்டமிழந்ததால் அவரை நீங்கள் நிராகரித்துவிட வேண்டாம். இத்தொடரில் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து பாருங்கள்.
Rishabh Pant: ரிஷப் பண்ட்டை எப்போது விளையாட போகிறார்.
ரிஷப் பண்ட் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒருநாள் அணிக்கு திரும்பி இருக்கிறார். அவரை எப்போது விளையாட வைக்கப்போகிறீர்கள். அவர் ஒரு முழுமையான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், 4 அல்லது 5வது இடத்தில் சிறப்பாக விளையாடக்கூடியவர். அவரை அந்த இடத்திற்கு தேர்வு செய்யாமல், அந்த இடத்தில் விளையாடாத இரண்டு வீரர்களை அனுப்புகிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அடுத்த இரண்டு போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு போட்டிகளில் இல்லை என்றாலும் அடுத்த போட்டியில் கண்டிப்பாக மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த போட்டியில் அவர் சரியாக விளையாடவில்லை என்றால்தான் அவர் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ருதுராஜ் கெய்க்வாட் இதுவரை 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஆனால் அவர் 123 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதில் ஒரு அரைசதமும் அடங்கும்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (டிசம்பர் 03) ராய்ப்பூர், ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
ஒருநாள் தொடருக்கான இரு அணிகள்
இந்தியா: கே.எல்.ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், துருவ் ஜுரேல்.
தென்னாப்பிரிக்கா: டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக், எய்டன் மார்க்ரம், டோனி டி சோர்ஸி, ரயான் ரிக்கல்டன், டேவிட் பிரேவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (விக்கெட் கீப்பர்), ராசி வான் டெர் டுசென், கைல் வெரைன், வியான் முல்டர், மார்கோ யான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, ஜெரால்ட் கோட்ஸி.
About the Author
R Balaji