Angammal: "அங்கம்மாளாக மாற நேர்மை தேவைப்பட்டுச்சு!" – கீதா கைலாசம்

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘அங்கம்மாள்’.

விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘அங்கம்மாள்’ படத்தை என்ஜாய் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நடிகரும் பாடகருமான பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சாய் சாமுவேல் ஆகியோர் தயாரித்திருக்கின்றனர்.

கீதா கைலாசமும், சரண் சக்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

கீதா கைலாசம் - சரண் சக்தி
கீதா கைலாசம் – சரண் சக்தி

தவிர பரணி, தென்றல் ரகுநாதன் மற்றும் வினோத் ஆனந்த் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

டிசம்பர் 5-ம் தேதி இப்படம் வெளியாகயிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (டிசம்பர் 2) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய கீதா கைலாசம், “’அங்கம்மாள்’ கதாபாத்திரமாக மாறுவதற்கு பயமில்லாத நேர்மை தேவைப்பட்டது. அவளுடைய மௌனத்திற்கும், பெருமைக்கும், இதயத்துடிப்புக்கும் முழுமையாக சரணடைய வேண்டியிருந்தது.

கிராமத்தில் படமாக்கியதால் ஒவ்வொரு ஃபிரேமிலும் நான் நடிக்கும் முறையே மாறியது. இந்தக் கதையை இவ்வளவு உணர்திறனுடன் வடிவமைத்த இயக்குநர் விபினுக்கு நன்றி.

ரிகர்சல் மூலம் அல்லாமல் அந்த கதாபாத்திரத்தை நான் உணர்ந்து நடிக்க அனுமதித்தார். சரண் சக்தி மற்றும் அனைத்து நடிகர்களின் நடிப்பும் இந்தக் கதையை உண்மையாக உணர வைத்தது.

கீதா கைலாசம் - பரணி
கீதா கைலாசம் – பரணி

இந்தப் படம் வெளியானதும் பரணியின் நடிப்பு நிச்சயம் பேசப்படும். படப்பிடிப்பில் நாங்கள் அனைவரும் மிகவும் சின்சியராக நடித்தோம்.

இந்தப் படம் எங்களுக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் நிச்சயம் புது அனுபவத்தையும் ஒரு தலைமுறையின் வலிமையையும் எடுத்து சொல்லும்” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.