அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் 2026 ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது அதனை முன்னிட்டு இம்மாதம் நடுப்பகுதியில் மினி ஏலமானது நடைபெறுகிறது. இந்த சூழலில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஐபிஎல்லின் 10 அணிகளும் தாங்கள் விடுவித்த மற்றும் தக்கவைத்துக்கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர். இதில் முக்கிய வீரர்கள் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளதால் மினி ஏலத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிரித்துள்ளது.
Add Zee News as a Preferred Source
Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ்
குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த மாதிரியான வீரர்களை ஏலத்தில் வாங்க இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த சீசனில் சொதப்பிய சிஎஸ்கே அணி வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த வேண்டும் என ரசிகர்கள் நினைக்கின்றனர். அதற்கு அணியில் சிறந்த வீரர்கள் வேண்டும் என்றும் அவர்கள் கருதுகின்றனர். சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திரமாக திகழ்ந்த சஞ்சு சாம்சனை சென்னை அணி டிரேட் மூலம் வாங்கியது. இதையடுத்து மினி ஏலத்தில் சில முக்கிய வீரர்களை வாங்க திட்டமிட்டு வருகிறது.
Ashwin Predicts CSK Mini Auction Players: உமேஷ் யாதவ் கூட அதிக தொகைக்கு போகலாம்
இந்த சூழலில், சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை வாங்கலாம் என்ற கணிப்பையும் பல முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும் இந்திய சுழற்பந்து வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை வாங்க வாய்ப்புள்ளது என்பது குறித்து பேசி இருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர், வரும் மினி ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிறைய டிமெண்ட் இருக்கும் என நினைக்கிறேன். இதனால் உமேஷ் யாதவ் கூட அதிக விலைக்கு போக வாய்ப்பு இருக்கிறது.
CSK Targets Auqib Nabi: காஷ்மீர் இளம் வீரருக்கு குறி
இந்த ஏலத்தில் காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் அகிப் நபிக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டார்கெட் செய்யலாம். ஆனால் அவரை பேக்கப் வீரராக வைக்கவே அதிக வாய்ப்புள்ளது. மற்றபடி ரஸல், மேக்ஸ்வெல் ஆகியோர் இல்லாததால் அவர்களுக்கு பதிலாக வேறு ஆல் ரவுண்டர்களுக்கு சிஎஸ்ஏ அணி குறிவைக்கும்.
Venkatesh Iyer: வெங்கடேஷ் ஐயரையும் வாங்க வாய்ப்புள்ளது
அந்த வகையில் வெங்கடேஷ் ஐயரை கூட வாங்க சென்னை அணி முனைப்பு காட்டலாம். அதேபோல் லியாம் லிவிங்ஸ்டனை வாங்க முற்படும். இவர்களுக்கு சிஎஸ்கே அணி பெரிய முதலீடை செய்ய அதிக வாய்ப்பு உள்ளது என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
CSK vs KKR: கடும் போட்டி நிலவும்
மினி ஏலத்திற்கு அதிக தொகை வைத்திருக்கும் அணிகளில் சிஎஸ்கே அணி இரண்டாவதாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 43.4 கோடி வைத்திருக்கிறது. சிஎஸ்கே அணியை விட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிக தொகை வைத்திருக்கிறது. அந்த அணி ரூ. 64.3 கோடி வைத்திருக்கிறது. இதனால் இந்த இரு அணிகளுக்கும் இடையே மினி ஏலத்தில் கடும் போட்டி நிலவும் என தெரிகிறது.
About the Author
R Balaji