நிசான் Kait என்ற புதிய காம்பாக்ட் எஸ்யூவியை பிரேசில், லத்தீன் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இந்தியா வருமா என்ற கேள்விக்கு தற்பொழுது எந்த தகவலும் இல்லை. கிக்ஸ் காரின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆக வடிவமைக்கப்பட்டு டிசைனில் பல மாற்றங்களைச் செய்து புதிய கைட் பெயரில் களமிறக்கியுள்ளனர்.
1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 113hp பவருடன், 146Nm டார்க் வெளிப்படுத்தும் CVT கியர்பாக்ஸ் கொண்டு புதிய க்ரில், மிக நேர்த்தியான ரன்னிங் விளக்குடன், எல்இடி ஹெட்லேம்புகள் மற்றும் பின்பக்கம் இணைக்கப்பட்ட டெயில் லேம்புகள், டேஷ்போர்டு டிசைன், வயர்லெஸ் சார்ஜர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ADAS பாதுகாப்பு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் நிசான் நிறுவனம் டெக்டான் புதிய எஸ்யூவியை அறிமுகப்படுத்த உள்ளதால், இந்த Kait இந்தியாவுக்கு தற்பொழுது வருவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு..! நிசானின் ரெசென்டே ஆலையில் உற்பத்தி 2026 முதல் துவங்கப்பட்டு, கைட் பிரேசிலில் இருந்து 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, முக்கியமாக தென் அமெரிக்காவில் ஏற்றுமதி செய்யப்படும்.




