இந்தியாவில் விமான போக்குவரத்து கடும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளது, இண்டிகோ விமான நிறுவனம் கடந்த 4 நாட்களாக முழுஅளவில் செயல்படமுடியாமல் தத்தளித்து வருகிறது. நேற்று 330 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று 550 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, இதனால் விமான பயணிகள் தாங்கள் பயணம் செய்யவிருக்கும் விமானம் இன்று பறக்குமா இல்லையா என்ற குழப்பத்தில் உள்ளனர். அப்படியே பறந்தாலும் அது சரியான நேரத்துக்கு தரையிறங்குமா என்பதும் தாங்கள் கொண்டு சென்ற லக்கேஜ் சரியாக வந்து சேருமா என்பதும் […]