ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது | Automobile Tamilan

2025 டிவிஎஸ் மோட்டோசோல் அரங்கில் புதிய ரோனின் கஸ்மைஸ்டு செய்யப்பட்ட அகோண்டா எடிசன் உட்பட பல்வேறு கஸ்டமைஸ் கான்செப்ட்கள், அப்பாச்சி 20வது ஆண்டு விழா RTX பதிப்பு ஆகியவை முதல் நாளில் வெளியாகியுள்ளது.

கோவாவின் புகழ்பெற்ற அகோண்டா கடற்கரையின் அமைதியையும் அழகையும் பிரதிபலிக்கும் வகையில் கஸ்டமைஸ்டு ரோனின் வடிவமைக்கப்பட்டுள்ளதே இதன் தனிச் சிறப்பாகும்.

TVS Ronin Agonda

விற்பனையில் உள்ள அடிப்படை ரோனின் மாடலை தழுவியதாக 225.9cc என்ஜின் பயன்படுத்தப்பட்டு 20.4hp மற்றும் 19.93Nm வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸூடன் ஸ்லிப்பர் கிளட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.

அகோண்டாவில் புதிய வண்ணத்தை வழங்கியுள்ள டிவிஎஸ் மோட்டார் மிகவும் கவர்ச்சிகரமான வெண்ணிறத்துடன் நீலம் மற்றும் சிவப்பு நிறப் பட்டைகள் அழகாகத் தீட்டப்பட்டுள்ளன. பெட்ரோல் தொட்டியின் மீது பொறிக்கப்பட்டுள்ள ‘அகோண்டா’ பேட்ஜிங் மேலும், கருப்பு நிற சக்கரங்களில் மெல்லிய சிவப்பு நிற டிகேல் பெற்று கஸ்டமைஸ்டு வாகனத்துக்கு உரித்தான தனித்துவ அடையாளத்தை வெளிப்படுத்துகின்றது.

இந்த ரோனினில் டிஜிட்டல் திரையுடன் கூடிய ப்ளூடூத் இணைப்பு வசதி மூலம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அறிந்து கொள்ளவும், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் பயன்படுத்தவும் முடியும்.

இந்த அகோண்டா 1.31 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.