Shubman Gill Latest News: இந்திய கிரிக்கெட் அணியுடன் தென்னாப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதிய நிலையில், அத்தொடரில் தென்னாப்பிரிக்கா அணி ஆதிக்கம் செலுத்தி 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது. இதையடுத்து தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தொடரில் வெற்றி பெறப்போவது யார் என்ற தீர்மானிக்கு போட்டி அதாவது தொடரின் கடைசி போட்டி இன்று (டிசம்பர் 06) நடைபெற இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
India vs South Africa: இந்தியா – தென்னாப்பிரிக்கா டி20
இந்த தொடர்களில் இருந்தும் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் விலகி உள்ளார். டெஸ்ட் தொடரின்போது க்ழுத்தில் ஏற்பட்ட வலியின் காரணமாக விலகி ஓய்வு எடுத்தார். அந்த காயத்தில் இருந்து குணமடைந்த நிலையில், அவரை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வரும் 09ஆம் தேதி தொடங்க இருக்கும் 5 போட்டிகள் கொடன் டி20 தொடரில் சேர்த்துள்ளனர். சும்பன் கில் கழுத்து வலியில் இருந்து மீண்டு இந்திய அணிக்கு திரும்ப உள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சுப்மன் கில்லுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
Shubman Gill & Jasprit Bumrah: சுப்மன் கில்லுக்கு சிக்கல் – ஜஸ்பிரித் பும்ராவுக்கு பொறுப்பு
ஆதாவது, அவர் இந்த டி20 தொடரில் விளையாட வேண்டும் என்றால் அவரது உடற்ர்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். டி20 தொடருக்கு முன்பாக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால் மட்டுமே இத்தொடரில் இடம் பெறுவார். ஒருவேளை சுப்மன் கில் தனது உடற்தகுதியை நிரூபிக்க தவறினால், அவருக்கு பதிலாக துணை கேப்டனாக ஜஸ்பிரீத் பும்ரா செய்லபடுவார் என கூறப்படுகிறது.
Sanju Samson: சஞ்சு சாம்சனுக்கு தொடக்க வீரர் வாய்ப்பு
அதேபோல் அவர் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடும் இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் விளையாடுவார் என தெரிகிறது. அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடக்க இருப்பதால், இந்தியா தங்களது அணியை தயார்படுத்தி வருகிறது. இந்த உலகக் கோப்பையில் சுப்மன் கில் முக்கிய வீரராக இருக்கும் நிலையில், அவர் டி20 தொடரை தவறவிடமாட்டார் என்றும் அதனால் உடற்தகுதியை நிரூபித்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மான் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர்.
About the Author
R Balaji