நாளை டிசம்பர் 8 பள்ளிகளுக்கு விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு!

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை முன்னிட்டு, நாளை டிசம்பர் 8 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். பஞ்சபூத ஸ்தலங்களில் ‘மண்’ (பிருத்வி) ஸ்தலமாக போற்றப்படுவது காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில். சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் இக்கோயிலில், கடந்த 17 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், ஆகம விதிகளின்படி திருப்பணிகள் நிறைவுற்றதை தொடர்ந்து, நாளை காலை 5.45 மணியளவில் இக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.