சேலத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் சேரன் பேசியது இணையத்தில் வைரலாகி இருக்கின்றன.
புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சேரன், ” எப்படி சார் நிறைய பேர் உங்களை நேசிக்கிறார்கள் என்று என்னிடம் சிலர் கேட்பார்கள். நான் யாரையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்ததில்லை.

நான் இருக்கும் இடத்தில் எல்லோரையும் சந்தோஷமாக வைத்துக்கொள்வேன். என்னுடைய படத்தில் வில்லனே இருக்க மாட்டார்கள். ஏனென்றால் நான் வில்லன்களை விரும்புவதில்லை.
நான் வில்லனாகவும் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய வாழ்க்கை முறை. இப்படி இருந்தால் உங்கள் வாழ்க்கை அழகாக இருக்கும். எனக்கு வாழ்க்கையில் நிறையப் பிரச்னைகள் இருக்கிறது.
கடன் நிறைய இருக்கிறது. படம் எடுக்க முடியவில்லை. படம் எடுக்க புரொடியூசர் கிடைக்கவில்லை. கதை சொல்வதற்கு போனால் ஹீரோக்கள் கதை கேட்க மாட்டேன்கிறார்கள். இந்த மாதிரி நிறையப் பிரச்னைகள் இருக்கிறது. ஆனால் நான் நிம்மதியாக தூங்குகிறேன்.

சந்தோஷமாக இருக்கிறேன். காரணம் என்னவென்றால் வாழ்க்கையை ஈசியாக எடுத்துக்கொண்டேன். எல்லாவற்றையும் கடக்கும் சக்தி நம்மிடம் தான் இருக்கிறது. எல்லோரையும் நேசியுங்கள். சிரித்தமுகத்துடன் அன்பாக பேசுங்கள். அவ்வளவு நோயும் சரியாகிவிடும்” என்று சேரன் பேசியிருக்கிறார்.