Chennai Super Kings: ஐபிஎல் தொடரின் மினி ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த மினி ஏலத்தில் திறமை வாய்ந்த வீரர்களை எடுத்து தங்களது அணியை பலப்படுத்த அனைத்து அணிகளும் திட்டம் தீட்டி வருகின்றன. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பல திட்டங்களை வகுத்து வருகிறது. கடந்த சீசனில் சரியாக விளையாடாததால் வரும் தொடரில் அசத்த வேண்டும் என்று ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
Add Zee News as a Preferred Source
Sanju Samson: சஞ்சு சாம்சனை வாங்கிய சிஎஸ்கே
ஏற்கனவே டிரேட் முறைப்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் பேசி சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்கியது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், சிஎஸ்கே அணியின் ஒரு தூணாக இருந்த ஜடேஜாவை இழந்தது அவர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. இருப்பினும் அவரது இடத்திற்கு ஒரு திறமையான வீரர் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர்.
CSK Targets In IPL Mini Auction: பத்ரிநாத் கருத்து
இந்த நிலையில், ஜடேஜாவுக்கு பதில் இந்த வீரரை சிஎஸ்கே அணி எடுக்கலாம், அவரே ஜடேஜா, அஸ்வின் இல்லாத இடத்திற்கு சிறந்த தேர்வாக இருப்பர் என முன்னாள் சிஎஸ்கே வீரர் பத்ரிநாத் தனது யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.
Ravi Bishnoi: ரவி பிஷ்னோய்-க்கு குறிவைக்க வேண்டும்
இது தொடர்பாக பேசிய அவர், சிஎஸ்கே அணியில் ஜடேஜா, அஸ்வின் இல்லாத அந்த இடத்திற்கு லக்னோவில் இருந்து விடுக்கப்பட்ட ரவி பிஷ்னோய் சரியாக இருப்பார். சென்னை சேப்பக்கத்தில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சிற்ப்பாக செயல்படுவார்கள். நூர் அகமதுடன் அவரது காம்போ சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன் என கூறினார்.
Matheesha Pathirana: மதீஷா பதிரானாவை குறைந்த விலையில் மீட்க வேண்டும்
சுழற்பந்து வீச்சை போன்று சிஎஸ்கே அணி டெத் ஓவர் பந்துவீச்சிலும் கவனம் செலுத்த வேண்டும். ஜெரால்ட் கோட்ஸி, பதிரானா ஆகியோரில் ஒருவரை அவர்கள் கைப்பற்ற வேண்டும். அன்ரிச் நோர்க்யேவுக்கு அவர்கள் முயற்சி செய்ய வேண்டும். நோர்க்யே அதிவேக பந்து வீச்சாளர். கோட்ஸிவும் ஒரு நல்ல வீரர். கடந்த சீசனில் அவரை சிஎஸ்கே அணி வாங்க முயன்றது. ஒன்று பதிரானாவை சிஎஸ்கே அணி குறைந்த விலைக்கு மீட்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நோர்க்யே அல்லது கோட்ஸி ஆகிய இருவரில் ஒருவரை வாங்கினால் நன்றாக இருக்கும்.
David Miller: டேவிட் மில்லர் நல்ல ஃபினிஷராக இருப்பார்
அதேபோல் பேட்டிங்கில் மில்லரை டார்கெட் செய்யலாம். அவர் கடைசி நேரத்தில் எதிர் அணிக்கு பயத்தை கொடுக்கக்கூடியவர். அவர் கிரிக்கெட்டில் கடைசி கட்டத்தை எட்டிவிட்டார் என தோன்றலாம். ஆனால் சிஎஸ்கே அணியில் ரஹானே, உத்தப்பா, வாட்சன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். எனவே மில்லர் சிஎஸ்கே அணிக்கு பொருந்துவார் என்றும் கூறி உள்ளார் முன்னாள் சிஎஸ்கே வீரர் பத்ரிநாத்.