சீனிவாசமங்காபுரம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி விழாக்கள்: 30, 31-ந்தேதி நடக்கிறது

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருகிற 30-ந்தேதி வைகுண்ட ஏகாதசி, 31-ந்தேதி வைகுண்ட துவாதசி விழாக்கள் நடக்கின்றன. அதையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இந்த விழாக்களை முன்னிட்டு கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

30-ந்தேதி வைகுண்ட ஏகாதசி அன்று தனுர் மாத கைங்கர்யம், தோமால சேவை, கொலு, பஞ்சாங்க சிரவணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதிகாலை 2.30 மணியில் இருந்து மாலை 4 மணி வரை பக்தர்கள் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.

அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை இரவு சடங்குகள் நடக்கிறது. மாலை 5 மணியில் இருந்து இரவு 9 மணி வரை மீண்டும் பக்தர்களுக்கு சாமி தரிசன அனுமதி வழங்கப்படும்.

31-ந்தேதி வைகுண்ட துவாதசியை முன்னிட்டு தனுர் மாத கைங்கர்யங்கள், தோமால சேவை, கொலு மற்றும் பஞ்சாங்க சிரவணம் ஆகியவை அதிகாலை 4 மணியில் இருந்து அதிகாலை 5.30 மணி வரை நடக்கிறது.

சக்கர ஸ்நானம் காலை 8.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை நடக்கும் திருச்சி உற்சவம் காலை 6 மணியில் இருந்து காலை 7 மணி வரை நடக்கிறது.

2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தினத்தன்று, தனுர் மாத கைங்கர்யங்கள், தோமால சேவை, கொலு மற்றும் பஞ்சாங்க சிரவணம் ஆகியவை மதியம் 1 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை நடக்கிறது. அதன்பிறகு பக்தர்களுக்கு இலவச தரிசனம் அதிகாலை 4 மணியில் இருந்து மாலை 4 மணி வரை அனுமதிக்கப்படும்.

இரவு சடங்குகள் மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடக்கும். அதன் பிறகு மீண்டும் மாலை 5 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த 2 முக்கிய விழாக்களை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானத்தின் இந்து தர்ம பிரசார பரிஷத் மற்றும் அன்னமாச்சாரியார் திட்டத்தின் கீழ் கோவில் வளாகத்தில் பக்தி மற்றும் ஆன்மிக இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.