இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குபவருமான ரவிச்சந்திரன் அஸ்வின், தனது X தளத்தில் பகிர்ந்த ஒரு புகைப்படம் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்தது மட்டுமல்லாமல், சிறிது நேரம் குழப்பத்திலும் ஆழ்த்தியது. பாலிவுட் நடிகை சன்னி லியோனின் புகைப்படத்தையும், ஒரு தெருவின் படத்தையும் பகிர்ந்திருந்தார்.
Add Zee News as a Preferred Source
pic.twitter.com/BgevYfPyPJ
— Ashwin (@ashwinravi99) December 9, 2025
என்ன அந்த புதிர்?
அஸ்வின் பகிர்ந்த படத்தில் ஒரு பக்கம் பிரபல நடிகை சன்னி லியோன், மறுபக்கம் ஒரு தெருவின் படத்தை பார்த்த ரசிகர்கள், “அஸ்வின் என்ன சொல்ல வருகிறார்?” என்று தலையை பிய்த்து கொண்டனர். ஆனால், சிறிது நேரத்திலேயே கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் அந்த புதிரை விடுவித்துவிட்டனர். சன்னி லியோனிலிருந்து ‘சன்னி’ (Sunny) + தெருவில் இருந்து ‘சந்து’ (Sadhu) = சன்னி சந்து (Sunny Sandhu). ஆம், அஸ்வின் குறிப்பிட்டது வேறு யாரையும் அல்ல, தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் ஆல்-ரவுண்டரான சன்னி சந்து (Sunny Sandhu) என்பவரை தான்.
யார் இந்த சன்னி சந்து?
தற்போது நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வரும் 22 வயதான இளம் வீரர் சன்னி சந்து. சமீபத்தில் அகமதாபாத்தில் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில், கடைசி நேரத்தில் களமிறங்கி ருத்ரதாண்டவம் ஆடினார். வெறும் 9 பந்துகளில் 30 ரன்கள் விளாசி, தமிழ்நாடு அணி 183 ரன்கள் என்ற இலக்கை எட்டி வெற்றி பெற மிக முக்கிய காரணமாக அமைந்தார். சாய் சுதர்சனுடன் இணைந்து அவர் அமைத்த கூட்டணி ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இவரது இந்த அதிரடி ஆட்டத்தை பாராட்டும் விதமாகத்தான், அஸ்வின் தனது பாணியில் ஒரு ‘மீம்’ போட்டு பாராட்டியுள்ளார். வழக்கமான பாராட்டுக்களை விட, இப்படி சற்றே வித்தியாசமாகவும் நகைச்சுவையாகவும் அஸ்வின் பாராட்டியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
With 40 required off four overs, Sunny Sandhu turned it around with a game-changing over
Scorecard https://t.co/DlpijtPpFx@IDFCFIRSTBank | #SMAT pic.twitter.com/bkaaSpEl1S
— BCCI Domestic (@BCCIdomestic) December 8, 2025
சிஎஸ்கே ஏலத்தில் எடுக்குமா?
ஐபிஎல் மினி ஏலம் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில் அஸ்வின் சில சீக்ரட்களை அவ்வப்போது தெரிவித்து வருகின்றார். அதேபோல சென்னை அணிக்கு ஒரு ஃபினிஷர் தேவைப்பட்டு வரும் நிலையில், ஒருவேளை சிஎஸ்கே அணி சன்னி சந்துவை ஏலத்தில் எடுக்க முடிவு செய்திருக்கலாம். அதை சுட்டிக்காட்டும் விதமாக தான் அஸ்வின் இவ்வாறு பகிர்ந்துள்ளார் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். பல்வேறு வீரர்களை சென்னை அணி மினி ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்த்து வரும் நிலையில், இந்த இளம் வீரரையும் எடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
About the Author
RK Spark