கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை (ICC Men’s T20 World Cup 2026) போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று டிசம்பர் 11 முதல் தொடங்குகிறது. ஆச்சரியமூட்டும் விதமாக, டிக்கெட்டின் ஆரம்ப விலை வெறும் ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐசிசி வரலாற்றிலேயே இவ்வளவு குறைவான விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறை. இந்த மெகா டி20 உலக கோப்பை தொடர், 2026 பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்ளும் இத்தொடரில் 55 விறுவிறுப்பான போட்டிகள் நடைபெறவுள்ளன.
Add Zee News as a Preferred Source
At historic low entry-level prices, witness the world’s best in action at the ICC Men’s #T20WorldCup 2026 in India and Sri Lanka https://t.co/MSLEQzcObb pic.twitter.com/iMBPdpixMf
— ICC (@ICC) December 11, 2025
டிக்கெட் விலை மற்றும் விவரங்கள்
அனைத்து தரப்பு ரசிகர்களும் மைதானத்திற்கு வந்து போட்டிகளை காண வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐசிசி (ICC) இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இந்தியாவில் டிக்கெட் விலை ரூ.100 முதல் தொடங்குகிறது (தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டிகளுக்கு மட்டும்). அதே சமயம் இலங்கையில் டிக்கெட் விலை LKR 1,000 (இலங்கை ரூபாய்) முதல் தொடங்குகிறது. டிசம்பர் 11 இன்று மாலை 6:45 மணி முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம்.
டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?
ரசிகர்கள் ஐசிசி-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே டிக்கெட்டுகளை பெற முடியும்.
https://tickets.cricketworldcup.com/](https://tickets.cricketworldcup.com/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
உங்கள் கணக்கை உருவாக்கவும் அல்லது லாகின் செய்யவும்.
நீங்கள் பார்க்க விரும்பும் போட்டி, மைதானம் மற்றும் இருக்கை வகையை தேர்வு செய்யவும்.
ரூ.100 உள்ளிட்ட பல்வேறு விலைப்பட்டியலில் உங்களுக்கு ஏற்றதை தேர்வு செய்து பணம் செலுத்தவும்.
முன்பதிவு முடிந்ததும், உங்களுக்கான இ-டிக்கெட் (E-ticket) அனுப்பப்படும்.
The ICC has released the first batch of T20 World Cup 2026 tickets, starting at ₹100 in India and LKR 1000 in Sri Lanka.
ICC says the pricing strategy is meant to widen access for fans.
Which matches will you be travelling for? pic.twitter.com/w22r5OHIXe
— Cricbuzz (@cricbuzz) December 11, 2025
மைதானங்கள்
இந்தியாவில் அகமதாபாத், சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய மைதானங்களிலும், இலங்கையில் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய இடங்களிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த குறைந்த விலை டிக்கெட்டுகள் “முதலில் வருபவருக்கே முன்னுரிமை” (First come, first served) என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படும். அடுத்தடுத்த கட்டங்களில் (Phase 2, Phase 3) டிக்கெட் விலை உயர வாய்ப்புள்ளது. எனவே, கிரிக்கெட் ரசிகர்கள் உடனே முந்திக்கொள்ளுங்கள்.
About the Author
RK Spark