இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று சண்டிகரில் நடைபெற்றது. முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் களம் இறங்கியது. தென்ஆப்பிரிக்கா அணியின் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்திய அணி மாற்றங்கள் இல்லாமல் களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
Add Zee News as a Preferred Source
தென்னாபிரிக்க அணி பேட்டிங்
இன்றைய போட்டி பவுலர்களுக்கு அவ்வளவு சாதகமாக இல்லை. நான்காவது ஓவரில் வருண் சக்கரவர்த்தி முதல் விக்கெட்டை எடுத்திருந்தாலும், தென்னாப்பிரிக்கா அணி சிறப்பான பேட்டிங் செய்தனர். குறிப்பாக குயின்டன் டி காக் அதிரடியாக விளையாடினார். 46 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் உட்பட 90 ரன்கள் அடித்தார். மார்க்ரம் 29 ரன்களும், டோனோவன் ஃபெரீரா 30 ரன்களும், டேவிட் மில்லர் 20 ரன்களும் அடிக்க தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் அடித்தது. இந்திய அணியில் பும்ரா மற்றும் அர்ஸ்தீப் சிங்-ன் பந்துகளை தென் ஆப்பிரிக்கா அணியின் வீரர்கள் சிதறடித்தனர்.
Innings Break!
South Africa set a of0I#TeamIndia chase coming up
Scorecard ttps://t.co/japA2CIofo#INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/v81k2aqKky
— BCCI (@BCCI) December 11, 2025
இமாலய இலக்கு!
மிகவும் கடினமான இலக்கை எதிர்த்து களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்திலேயே துணை கேப்டன் கில் அவுட் ஆகி வெளியேறினார். யாரும் எதிர்பார்க்காத விதமாக மூன்றாவது இடத்தில் அக்சர் படேல் களமிறங்கினார். இது இந்திய அணி செய்த மிகப்பெரிய தவறாக அமைந்தது. அக்சர் படேல் 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டம் இழந்தார். மேலும் அபிஷேக் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினர்.
Clean striking
Tilak Varma Axar Patel #TeamIndia 67/4 in the 9th over
Updates https://t.co/japA2CIofo#INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/u93HPe3Q0l
— BCCI (@BCCI) December 11, 2025
சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் செய்த திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா நிதானமாக விளையாடினர். 7 ஓவர்களை சமாளித்த இந்த ஜோடியால் இந்திய அணிக்கு வெற்றியை ஏற்படுத்தி தர முடியவில்லை. கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் 23 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய ஜிதேஷ் சர்மாவாலும் அணியை சரிவிலிருந்து மீட்க முடியவில்லை. கடைசி வரை போராடிய திலக் வர்மா 34 பந்துகளில் 62 ரன்கள் அடித்தார். 19.1 ஓவர் முடிவில் இந்திய அணி 10 விக்கெட்களை இழந்து 162 ரன்கள் மட்டுமே அடித்து இந்த போட்டியில் தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு இந்திய அணியின் பவுலிங்கும், பேட்டிங் ஆர்டரில் செய்த மாற்றமும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
About the Author
RK Spark