பிஎம்டபிள்யூ கீழ் செய்படுகின்ற மினி நிறுவனம், தனது மடங்கக்கூடிய மேற்கூரை பெற்ற புதிய தலைமுறை கூப்பர் கன்வெர்ட்டிபிள் காரை இந்திய சந்தைக்கு எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 58.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மடங்கும் வகையிலான வெறும் 18 விநாடிகளில் இந்த மேற்கூரையைத் திறக்கவும், 15 விநாடிகளில் மூடவும் முடியும். அதுமட்டுமின்றி, மணிக்கு 30 கிமீ வேகத்தில் பயணிக்கும்போதும் கூட இந்த மேற்கூரையை இயக்கலாம் என்பது இதன் தனிச்சிறப்பாக உள்ளது.
வழக்கமான பாரம்பர்யத்தை பறைசாற்றுகின்ற புதிய மினி கூப்பர் எஸ் கன்வெர்ட்டிபிள் பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாகவும், நவீனமாகவும் முன்பக்கத்தில் உள்ள வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் புதிய கிரில் வடிவமைப்பு மூலமாக பிரீமியம் தோற்றத்தைக் கொடுக்கிறது. பின்பக்கத்தில் பிரிட்டன் கொடியின் வடிவத்தைக் கொண்ட எல்இடி டெயில் லைட்கள், 18-அங்குல அலாய் சக்கரங்கள் இதன் தோற்றத்தை மேலும் மெருகூட்டுகின்றன.


இன்டீரியரில் மிக முக்கியமாக ரெட்ரோ தளத்தை நினைவுப்படுத்த ஏற்ற நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 9.4 அங்குல வட்ட வடிவ ஓஎல்இடி (OLED) தொடுதிரையில் அனைத்துத் தகவல்களையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் வழங்குகிறது. கூடுதலாக இந்த மாடலில் வயர்லெஸ் சார்ஜிங், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ (இணைப்பு, ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்றவை பயணத்தை மிகவும் சவுகரியமானதாக மாற்ற உதவுகின்றன.
சக்திவாய்ந்த 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 204 bhp மற்றும் 300 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 7-வேக டியூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. வெறும் 6.9 விநாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டுகின்ற கூப்பர் எஸ் கன்வெர்டிபிள் அதிகபட்ச வேகம் மணிக்கு 237 கிமீ ஆகும்.
பிரிட்டிஷ் ரேசிங் கிரீன், சில்லி ரெட், சன்னி சைட் மஞ்சள் மற்றும் ஓஷன் வேவ் கிரீன் என நான்கு வண்ணங்களில் கிடைக்கின்ற இந்த மாடலுக்கு மிரர் கேப்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை கலவையில் கிடைக்கின்றன.



