மகாருத்ர ஹோமம்: ஆயுளில் ஒருமுறையாவது செய்ய வேண்டியது ஏன்? 8 பரிகாரங்கள் சொல்கிறது சாஸ்திரம்!

மகாருத்ர ஹோமம்: மகாருத்ர ஹோமத்தை நடத்தினாலோ, அதில் கலந்து கொண்டு சங்கல்பித்தாலோ எல்லா காரியங்களும் தடையின்றி நடைபெறும். தரித்திரத்தில் இருப்பவர் கோடீஸ்வரனாக மாறுவர் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மகாருத்ர ஹோமம்

ஈசனின் வேக வடிவங்களில் முதன்மையானது ஸ்ரீருத்ர வடிவம். ருத்ர பகவான் சிவபெருமானின் உக்கிரமான வடிவமாக இருப்பதால் ஸ்ரீருத்ரனை வணங்குபவர்களுக்கு தைரியமும் வீரமும் உண்டாகும் அவர்கள் எடுக்கும் காரியங்கள் வெற்றியைக் கொடுக்கும் எனப்படுகிறது. அதிலும் வேதத்தின் சிறப்பான மந்திரமான ஸ்ரீருத்ரத்தை பலமுறைகள் உச்சரித்து செய்யப்படும் மகாருத்ர ஹோமத்தை நடத்தினாலோ, அதில் கலந்து கொண்டு சங்கல்பித்தாலோ எல்லா காரியங்களும் தடையின்றி நடைபெறும். தரித்திரத்தில் இருப்பவர் கோடீஸ்வரனாக மாறுவர் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ரிஷிகளாலும் முழுமையாக விவரிக்க முடியாத இந்த மகாருத்ர ஹோமத்தின் பலன்களையும் சிறப்புகளையும் இங்கே காண்போம்.

மார்கழி என்றாலே ஈசனைக் கொண்டாடும் புண்ணிய மாதம். அதிலும் ஆடல்வல்லான் நடராஜ பெருமானுக்குரிய 6 அபிஷேக நாள்களில் ஒன்றான ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும் திருவாதிரை திருநாளும் ஆருத்ரா தரிசனமும் கிடைக்கும் மாதம் மார்கழி. மார்கழியில் இந்த புண்ணிய நாள்களைக் கொண்டாடவும் வரும் 2026 புத்தாண்டை உங்களுக்கான அதிருஷ்ட ஆண்டாகவும் மாற்ற சக்தி விகடன் இதழும் கோவை ஆர்.எஸ்.புரம் அருள்மிகு ஸ்ரீஸ்ரீ அண்டவாணர் திருக்கோயிலும் இணைந்து நடத்த விரும்பினோம். அதன்படி வரும் 2026 ஜனவரி 2-ம் தேதி காலை மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் விகடன் வாசகர்கள் நல்வாழ்வுக்காக கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீஅண்டவாணர் திருக்கோயிலில் மகாருத்ர ஹோமம் நடைபெற உள்ளது.

சென்ற ஆண்டு 2024 ஜூலை 21-ம் நாள் இங்கு நடைபெற்ற மகாருத்ர ஹோமத்தில் கலந்து கொண்டவர்கள் பலரது வாழ்வில் பல அற்புதங்கள் நடைபெற்றன என்று சொல்லப்பட்டது. கோவை ஆர்.எஸ்.புரத்தில் வசிக்கும் சிவனடியாரான சிவஸ்ரீ செந்தில்குமார், அருளார்கள் காட்டியருளிய வழியில் தனக்குச் சொந்தமான பூர்வீக இல்லத்தையே `அண்டவாணர் அருட்துறை’ என்ற பெயரில் கோயிலாக அமைத்துள்ளார். இந்த ஆலயம் எந்தவித பேதமும் இன்றி எல்லா மக்களாலும் வழிபடப்படும் அதிசய ஆலயம். இங்கு இலவசமாகவே எல்லா வழிபாடுகளும் நடைபெறுகின்றன. இங்கு அருளும் அம்மையப்பருக்கு ஸ்ரீஅன்பில்பிரியாள் அம்மை சமேத ஸ்ரீஅண்டவாணர் பெருமான் என்பது திருநாமம். இவர் களுடன் மிகப்பெரிய வடிவில் ஸ்ரீசிவகாமி உடனாய ஞானக்கூத்தப் பெருமான், சோமாஸ்கந்தர், மற்றும் 63 நாயன்மார்கள் என சிவாலய பரிவாரங்களையும் முறையாகப் பிரதிஷ்டை செய்து நித்ய வழிபாடுகளை நிகழ்த்தி வருகிறார் சிவஸ்ரீ செந்தில்குமார்.

மகாருத்ர ஹோமம்

இந்த அண்டவாணப் பெருமானுக்கு வைரத்திருத்தேர் செய்து கோவையில் தேர் திருவிழா நடத்த வேண்டும் என்பது இவரது பல நாள் கனவு. இவரது கடைசி சொத்து வரை விற்று, பெரும் சிரமங்களுக்கு இடையே வரும் 2026 ஜனவரி 3-ம் தேதி மார்கழி திருவாதிரை நன்னாள் அதிகாலை தேரோட்டம் நடத்தவும் உள்ளார். தில்லைக்குப் பிறகு நடராஜப்பெருமான் வீதி உலா வருவது இங்கு மட்டுமே என்பதும் அதிசயம். வரும் டிசம்பர் 25-ம் தேதி தொடங்கவிருக்கும் ஸ்ரீஅண்டவாணர் திருவாதிரைத் திருவிழா அடுத்த 2026 ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை பல்வேறு அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற உள்ளது. அதன் சிறப்பம்சமாக நடைபெறுவதே ஜனவரி 2 அன்று நடைபெறும் ஸ்ரீருத்ர ஹோமம். மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் நடைபெறும் மகாருத்ர ஹோமத்தில் பங்குகொள்ள அனைவரையும் அழைக்கிறோம். இந்த ஸ்ரீருத்ர ஹோமத்தினால் பயம், கவலை போன்றவை நீங்கி, ஆயுள், ஆரோக்கியம், அபிவிருத்தி, ஐஸ்வர்யம் யாவும் பெருகும் என்பது உறுதி. மேலும் ஒருவர் தனது ஆயுளில் ஒருமுறையாவது மகாருத்ர ஹோமத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது சாஸ்திரங்கள் கூறும் ஆன்மிக அறிவுரை. இந்த ஹோமத்தில் ஏன் கலந்து கொள்ள வேண்டும் என்று 8 விதமான பரிகார பலன்களையும் சொல்லியுள்ளது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

1. ருத்ர ஹோமத்தில் சங்கல்பித்தவர் வீட்டில் எந்த தீமைகளும் வராது. அவர் வேண்டுதலும் விருப்பமும் பலிக்கும். இந்த துடியான ருத்ர ஹோமத்தால் தீமைகள் விலகி முன்னேற்றம் உருவாகும். இதுவரை தடைப்பட்டிருந்த சகல காரியங்களும் நடைபெறும். வெற்றி உண்டாகும். கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் மலரும்.

மகாருத்ர ஹோமம்

2. ஆயுள், ஆரோக்கியம், அபிவிருத்தி, ஐஸ்வர்யம், அதிர்ஷ்டம் யாவும் அளிக்கும் ஹோமம் இது.

3. வீரத்தின் அடையாளமான ருத்ர பகவானை திருப்தியாக்கும் வழிபாடு என்பதால் இந்த ஹோமத்தால் தோஷங்களும் பாவங்களும் நீங்கி உங்கள் வாழ்வே புதிய உற்சாகத்தில் மீண்டு எழும்.

4. தீர்க்க முடியாத நோய்களும் தரித்திரமும் விலகும். குறிப்பாக மலையளவு கடனும் நீங்கி செல்வசௌபாக்கியம் பெருகும்.

5. மங்கல காரியங்கள் யாவும் மளமளவென நடைபெறும். நீங்கள் தொடங்கும் சகல காரியங்களும் சுபமாக முடியும். வழக்குகள் தீரும்.

6. கண் திருஷ்டி, எதிரிகள் தொல்லை, எதிர்மறை சிந்தனைகள் தீரும். வீட்டில் சுபீட்சம் உண்டாகும்.

7. குடும்ப பிரச்னைகள் தீரும். குறிப்பாக தம்பதி ஒற்றுமை உண்டாகும். தீய சகவாசம், பழக்கங்கள் கொண்டவர் மனம் திருந்தி நல்ல வழியில் நடப்பர்.

8. ருத்ர ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பித்தவர் செல்வாக்கும் சொல்வாக்கும் பெற்று உயர்ந்த பதவியை அடைவர். அவர்களை யாரும் வெல்ல முடியாது என்பது ஆன்மிக நூல்கள் சொல்லும் சத்திய சாட்சி.

எனவே இனியும் தாமதிக்காமல் இந்த மகாருத்ர ஹோமத்தில் இன்றே சங்கல்பித்துக் கொள்ளுங்கள்.

மகாருத்ர ஹோமம்

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

வாசகர்களின் கவனத்துக்கு!

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.500/-மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், இந்த வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும்.

அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது, பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். குறிப்பிட்ட நாளில் வாசகர்கள், சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் இந்த வழிபாட்டு வைபவங்களை வீடியோ வடிவிலும் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.