இந்திய கிரிக்கெட் அணியுடன் தென்னாப்பிரிக்கா அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிவடைந்துள்ளது. அதில் முதல் போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 51 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றியை பெற்றது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் அடுத்த போட்டியை இரண்டு அணிகளும் எதிர்கொள்கிறது. இதனால் வரும் போட்டி மிகவும் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும்.
Add Zee News as a Preferred Source
India vs south Africa 3rd T20: நாளை நடக்கும் இந்தியா – தென்னாப்பிரிக்கா 3வது டி20
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை (டிசம்பர் 14) ஹிமாச்சல் பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்க இரண்டு அணிகளுமே துடித்து வருகிறது. இதறகாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் கடந்த போட்டியில் இந்திய நி தோல்வி அடைந்ததால், மூன்றாவது போட்டியின் பிளேயிங் 11ல் ஓரிரு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மாற்றம் நடக்கும் நிலையில், எந்த வீரர் வெளியேறுகிறார், எந்த வீரர் உள்ளே வர வாய்ப்புள்ளது என்பது குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.
Reason Behinds India’s Defeat: இந்தியாவின் தோல்விக்கான காரணங்கள்
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோற்றதற்கு மிக முக்கிய இரண்டு, மூன்று காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, பந்துவீச்சின்போது அதிக ரன்களை விட்டுக்கொடுத்தது. அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி விக்கெட்கள் ஏதும் கைப்பற்றமல் 54 ரன்களை வாரி வழங்கினார். இரண்டாவதாக பேட்டிங்கில் திலக் வர்மாவை தவிர்த்து பெரிதாக எவரும் சோபிக்கவில்லை. குறிப்பாக துணை கேப்டன் சுப்மன் கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இந்த போட்டியில், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்து டக் அவுட் ஆகி வெளியேனார். மூன்றாவதாக பேட்டிங் ஆர்டரை குழப்பி அடிப்பது போன்ற காரணங்கள் உள்ளன.
India Predicted XI For 3rd T20 Against South Africa: மூன்றாவது போட்டியில் ஏற்படும் மாற்றங்கள்
இதில் முதல் இரண்டு காரணமாக இருந்த அர்ஷ்தீப் சிங் மற்றும் சுப்மன் கில் ஆகியோரை இப்போட்டியில் பெஞ்சில் அமர வைக்க திட்டம் இருப்பதாக தெரிகிறது. சுப்மன் கில்லை தூக்கிவிட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிப்பதாகவும் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக ஹர்ஷித் ராணா வர உள்ளதாகவும் கணிக்கப்படுகிறது, மற்றபடி பெரிதாக மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை என தெரிகிறது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி20க்கான இந்தியாவின் கணிக்கப்பட்ட பிளேயிங் 11: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
About the Author
R Balaji