தென்னாப்பிரிக்காவை துவம்சம் செய்த இந்தியா! 3வது டி20 போட்டியில் ஈஸி வின்

India vs South Africa : தரம்சாலாவில் நடந்த இந்தியா மற்றும் சவுத் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 5 மேட்ச்கள் கொண்ட டி20 சீரிஸின் மூன்றாவது போட்டி தரம்சாலாவில் நடைபெறது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் மிரட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலையும் பெற்றுள்ளது.

Add Zee News as a Preferred Source

இந்திய அணி பவுலிங்

இப்போட்டியில் டாஸ் வின் பண்ண இந்தியன் கேப்டன் சூர்யகுமார் யாதவ், கொஞ்சம் கூட யோசிக்காம பௌலிங்கை தேர்வு செய்தார். பனிப்பொழிவு மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான கிரவுண்ட் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்தார். சூர்யகுமார் நினைத்தது போலவே, முதல் ஓவர்ல இருந்தே ஆட்டம் இந்திய அணி பக்கமே  இருந்தது. ஃபாஸ்ட் பௌலர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆரம்பத்திலேயே அதிரடியாக பந்துவீசினர். இதனால், தென்னாப்பிரிக்காவின் முக்கியமான பேட்ஸ்மேன்களான ரீஸா ஹென்ரிக்ஸ் டக்அவுட்டிலும், விக்கெட் கீப்பர் டி காக் ஒரு ரன் எடுத்து, அவுட்டாகினர். பவர்பிளே இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. பின்னர், ஹர்திக் பாண்டியா, சிவம் தூபேவும் விக்கெட் வேட்டை நடத்தினர்.

மார்க்ரம் போராட்டம்

ஒரு பக்கம் விக்கெட்கள் வரிசையா விழுந்தாலும், சவுத் ஆப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் மட்டும் சிறப்பாக விளையாடினார். 46 பந்துகளை எதிர்கொண்ட அவர், 4 பவுண்டரி, 6 சிக்ஸர்ஸ் உட்பட 61 ரன்கள் அடிச்சு, டீமுக்கு ஒரு நல்ல ஸ்கோரை செட் பண்ண ட்ரை பண்ணார். ஆனா, மிடில் ஓவர்ஸ்ல ஸ்பின் பௌலர்களான குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆட்டத்தை மீண்டும் இந்திய அணி பக்கமே கொண்டு வந்தனர். வருண் சக்கரவர்த்தி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்ஸ் எடுக்க, குல்தீப் யாதவ் தன் பங்குக்கு 12 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்ஸ் எடுத்தார். கடைசியில், மொத்தம் 117 ரன்களுக்கு சவுத் ஆப்பிரிக்கா டீம் ஆல் அவுட் ஆனது.

சேஸிங்கில் மிரட்டிய இந்தியா

இந்திய அணி வெற்றி பெற 118 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. சின்ன டார்கெட்டை சேஸ் பண்ண வந்த இந்தியன் டீம், ஆரம்பத்துல இருந்தே அதிரடியா ஆட்டத்தை ஆரம்பித்தது. ஓப்பனர் அபிஷேக் சர்மா, சவுத் ஆப்பிரிக்கா பௌலர்களை துவம்சம் பண்ண ஆரம்பிச்சார். அவர் வெறும் 18 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்ஸ் உட்பட 35 ரன்கள் அடிச்சு, மேட்ச்சை இந்தியன் பக்கம் திருப்பினார். அவரும், சுப்மன் கில்லும் சேர்ந்த பார்ட்னர்ஷிப், முதல் விக்கெட்டுக்கே 60 ரன்கள் அடிச்சு டீமை செம ஸ்ட்ராங்கான பொசிஷனுக்கு கொண்டு போச்சு. அபிஷேக் அவுட் ஆனாலும், இந்தியா பவர்பிளேவிலேயே 68 ரன்களைக் கடந்து, பிரஷரை மொத்தமா குறைச்சது.

பின்னர் சுப்மன் கில் 28 ரன்கள் எடுத்து அவுட்டாக, சூர்யகுமார் யாதவ் 12 ரன்கள் எடுத்து அவுட்  ஆனார். திலக் வர்மா 25 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். கடைசி நேரத்தில், ஆல்ரவுண்டர் சிவம் தூபே களமிறங்கி, சில பந்துகளிலேயே 1 சிக்ஸர், ஒரு பவுண்டரி அடிச்சு, வெறும் 15.5 ஓவர்களிலேயே மேட்ச்சை சூப்பரா முடிச்சு வைத்தார்.

மேலும் படிக்க | மினி ஏலத்தில் சர்பராஸ் கான்… CSK உள்பட 3 அணிகள் குறிவைக்கும்!

மேலும் படிக்க | இந்த ஒரு வீரரை சிஎஸ்கே நிச்சயம் ஏலத்தில் எடுப்பார்கள்! ஏன் தெரியுமா?

மேலும் படிக்க | 2026 ஐபிஎல் மினி ஏலம்: இந்த 5 வீரர்களுக்குதான் அதிக டிமெண்ட்.. CSK எந்த வீரரை எடுக்கும்?

 

About the Author


Karthikeyan Sekar

Karthikeyan Sekar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.