ஐபிஎல் 2026க்கான மினி ஏலம் நாளை நடைபெறவுள்ள நிலையில், ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி தனது 6வது கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிரமாக களம் இறங்குகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையில் ஏற்கனவே ஒரு நட்சத்திரப் பட்டாளமே உள்ள நிலையில், அணியில் இருக்கும் சிறு சிறு ஓட்டைகளை அடைக்க இந்த ஏலத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இப்போது இருக்கும் மிகப்பெரிய சவால் குறைவான பட்ஜெட். அவர்களிடம் ஏலத்திற்காக கையில் இருப்பது வெறும் ரூ.2.75 கோடி மட்டுமே. ஆனால், இன்னும் 5 இடங்களை (1 வெளிநாட்டு வீரர் உட்பட நிரப்ப வேண்டியுள்ளது.
Add Zee News as a Preferred Source

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
மும்பை அணியின் மிகப்பெரிய பலமே அதன் அனுபவம் வாய்ந்த வீரர்கள் தான். ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் தென்னாப்பிரிக்காவின் ரியான் ரிக்கல்டன் ஆகியோர் டாப் ஆர்டரை வலுப்படுத்துகிறார்கள். உலகின் தலைசிறந்த டி20 பவுலரான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் டிரென்ட் போல்ட் கூட்டணி எந்தவொரு பேட்டிங் வரிசையையும் சிதறடிக்கும் வல்லமை கொண்டது. இவர்களுடன் தீபக் சஹார் மற்றும் அஷ்வினி குமார் போன்ற இந்திய பந்துவீச்சாளர்களும் உள்ளனர். மேலும் கேப்டன் ஹர்திக் பாண்டியா, முகமது நபி, மிட்செல் சாண்ட்னருடன் தற்போது புதிதாக ஷர்துல் தாக்கூர் (லக்னோவிலிருந்து மாற்றம்) மற்றும் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் (குஜராத்திலிருந்து மாற்றம்) ஆகியோர் இணைந்துள்ளனர்.
வெளியேற்றப்பட்டவர்கள்
அர்ஜுன் டெண்டுல்கர் லக்னோ அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார். இது தவிர பெவன் ஜேக்கப்ஸ், கர்ன் சர்மா, லிசாட் வில்லியம்ஸ் உள்ளிட்ட சில வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மயங்க் மார்கண்டே கொல்கத்தா அணியிலிருந்து மும்பைக்கு திரும்பியுள்ளார்.
ஏலத்தில் டார்கெட்
திலக் வர்மா மற்றும் வில் ஜாக்ஸ் கடந்த சீசனில் எதிர்பார்த்த அளவு ஸ்டிரைக் ரேட்டில் விளையாடவில்லை. எனவே, ரூதர்ஃபோர்ட் மாற்று வீரராக வந்திருந்தாலும், குறைந்த விலையில் கிடைக்கும் ஒரு சிறந்த இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை தேடுவார்கள். சர்ஃபராஸ் கான் போன்ற உள்ளூர் திறமையாளர்கள் இவர்களது டார்கெட்டில் இருக்கலாம். மயங்க் மார்கண்டே மற்றும் ஆப்கானிஸ்தானின் அல்லா கசான்ஃபர் இருந்தாலும், அனுபவம் வாய்ந்த இந்திய ஸ்பின்னர்கள் தேவைப்படலாம்.

குறைந்த பட்ஜெட் என்பதால் பெரிய நட்சத்திர வீரர்களை மும்பை அணியால் ஏலத்தில் எடுக்க முடியாது. ஆனால், திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டு வளர்த்தெடுப்பதில் மும்பை இந்தியன்ஸ் எப்போதுமே கில்லாடி. சிறிய பட்ஜெட் குறைபாடுகள் இருந்தாலும், ரோகித், பும்ரா, சூர்யகுமார், ஹர்திக் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்ட மும்பை இந்தியன்ஸ், மிக வலுவான அணியாகவே காட்சியளிக்கிறது. ஹர்திக் பாண்டியாவின் தலைமையில், பும்ரா மற்றும் சூர்யகுமாரின் உதவியுடன், மீண்டும் ஒருமுறை ஐபிஎல் கோப்பையை மும்பைக்குக் கொண்டு வர இந்த அணி தயாராக உள்ளது.
About the Author
RK Spark