ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இத்தொடருக்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்து விட்டது. அதற்கு காரணம், ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்துக்கொண்ட மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 15ஆம் தேதி வெளியிட்டது. இதில் சில முக்கிய வீரர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், மினி ஏலத்தில் அவர் எந்த அணிக்கு மாற்ற உள்ளனர் என்ற எதிர்பார்ப்புதான் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதிலும் சில வீரர்கள் டிரேட் மூலம் அணிகள் மாறினர். அதுவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒரு காரணமாக உள்ளது. இந்த சூழலில், 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. இது எப்போது, எங்கு நடக்கிறது. எதில் பார்க்கலாம்? ஒவ்வொரு அணியிடமும் எவ்வளவு தொகை உள்ளது என்ற முழு விவரத்தை இங்கு தெரிந்துக்கொள்வோம்.
Add Zee News as a Preferred Source
2026 ஐபிஎல் மினி ஏலம் எப்போது?
அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் மினி ஏலம் நாளை (டிசம்பர் 16) நடைபெற இருக்கிறது.
2026 ஐபிஎல் மினி ஏலம் எங்கே?
இந்த ஆண்டு ஐபிஎல் மினி ஏலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் நடைபெறுகிறது.
2026 ஐபிஎல் மினி ஏலம் எந்த நேரத்தில் தொடங்குகிறது?
இந்திய நேரப்படி சரியாக நாளை டிசம்பர் 16 அன்று பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்குகிறது.
2026 ஐபிஎல் மினி ஏலத்தை எதில் பார்க்கலாம்?
ஐபிஎல் மினி ஏலத்தை நேரடி ஒளிப்பரப்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்கில் பார்க்க முடியும். மேலும், ஜியோ ஹாட்ஸ்டார் செயலி மற்றும் வலைதளத்தில் பார்க்கலாம்.
2026 ஐபிஎல் மினி ஏலத்திற்கு ஒவ்வொரு அணியும் எவ்வளவு தொடகையுடன் வருகிறது?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ரூ. 64.3 கோடி உள்ளது. இந்த அணியில் மொத்தம் 13 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூ. 43.4 கோடி உள்ளது. இந்த அணியில் மொத்தமாக 9 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் ரூ. 25.5 கோடி உள்ளது. இந்த அணியில் மொத்தம் 10 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் ரூ. 22.95 கோடி உள்ளது. இந்த அணியில் மொத்தம் 6 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் ரூ. 21.8 கோடி உள்ளது. இந்த அணியில் 8 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் ரூ. 16.4 கோடி உள்ளது. இந்த அணியில் 8 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ரூ. 16.05 கோடி உள்ளது. இந்த அணியில் மொத்தம் 9 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ரூ. 12.9 கோடி உள்ளது. இந்த அணியில் மொத்தம் 5 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் ரூ. 11.5 கோடி உள்ளது. இந்த அணியில் மொத்தம் 4 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ரூ. 2.75 கோடி உள்ளது. இந்த அணியில் மொத்தம் 5 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
2026 ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக போட்டி உள்ள வீரர்கள் யார் யார்?
ஐபிஎல் மினி ஏலத்தில் சில வீரர்களுக்கு அதிக போட்டி இருக்கும் என தெரிகிறது. அவர்களுக்கு அதிக தொகை வைத்திருக்கும் சிஎஸ்கே, கேகேஆர், எஸ்ஆர்ஹெச், எல்எஸ்ஜி போன்ற அணிகள் போட்டிப்போட வாய்ப்புள்ளது. லியாம் லிவிங்ஸ்டோன், கேமரூன் கிரீன், ரவி பிஷ்னோய், மதீஷா பதிரனா, ஆகாஷ் தீப் உள்ளிட்ட வீரர்களுக்கு போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About the Author
R Balaji