தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் அதன் பின்னர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்கள் நடைபெற்ற நிலையில், தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் இந்திய அணி முதல் மற்றும் மூன்றாவது டி20 போட்டியில் வென்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
Add Zee News as a Preferred Source
India vs South Africa T20: இந்தியா – தென்னாப்பிரிக்கா 3வது போட்டி
நேற்று (டிசம்பர் 14) இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் எய்டன் மார்க்ரம் மட்டுமே 61 ரன்கள் அடித்தார். அவருக்கு பின்னர் டோனோவன் ஃபெரீரா 20 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் அனைவருமே ஒற்றை இலக்கு ரன்னில் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில், இந்திய அணியின் அனைத்து வீரர்களுமே சிறப்பாக செயல்பட்டிருந்தனர். ஹர்சித் ராணா, அர்ஷதீப் சிங், வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் ஹர்திக் பாண்டியா, சிவம் துபே தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Team India: இந்திய அணி முன்னிலை
இதையடுத்து 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அதனை 15.5 ஓவர்களிலேயே அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 35 ரன்கள் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. இந்த நிலையில், நாளை மறுநாள் (டிசம்பர் 17) தொடரின் 4வது டி20 போட்டி நடைபெற இருக்குக்கிறது. இப்போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இந்திய அணியில் எந்த மாதிரியான மாற்றங்கள் இருக்கும் என்ற உத்தேச பிளேயிங் 11னை இங்கு பார்க்கலாம்.
India Playing XI Against South Africa For 4th T20: சுப்மன் கில், ஹர்ஷித் ராணா நீக்கம்?
தொடக்க வீரர் சுப்மன் கில் இன்னும் சரியான ஃபார்முக்கு திரும்பியதுபோல் தெரியவில்லை. அவர் நேற்றைய போட்டியில் 28 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் 4வது டி20 போட்டியில் அவரை நீக்கிவிட்டு சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என தெரிகிறது. அதேபோல் பந்து வீச்சில் ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக ஜஸ்பிரித் பும்ராவை பிளேயிங் 11க்குள் கொண்டு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்திய அணி மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை வகித்ததால் ஓரளவு இருந்த அழுத்தம் குறைந்திருக்கும். எனவே 4வது போட்டியில் சில வீரர்களை கொண்டு வந்து முயற்சி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது போட்டிக்கான இந்தியாவின் உத்தேச பிளேயிங் 11
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சகரவர்த்தி.
About the Author
R Balaji