இந்தியா vs தென்னாப்பிரிக்கா 4வது டி20: இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரில் மோதி வருகின்றன. தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து, T20 தொடரில் 2-1 என்ற கணக்கில் முக்கிய முன்னிலை பெற்ற பிறகு, நான்காவது T20I போட்டி இன்று, டிசம்பர் 17 அன்று லக்னோவில் உள்ள எகானா ஸ்டேடியத்தில் நடைபெறும். IPL 2026 இன் மினி ஏலம் நடைபெற்ற ஒரு நாள் கழித்து இந்த போட்டி நடக்கிறது என்பதால், இரு அணிகளும் வெற்றிக்காக போராடுவார்கள். எனவே இன்றைய போட்டியில் பரபரப்பு உச்சத்தில் இருக்கும்.
Add Zee News as a Preferred Source
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா 4வது போட்டி நேரம் மற்றும் இடம்
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மோதும் நான்காவது டி20 போட்டி பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் எகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்குத் தொடங்குகிறது.
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா 4வது போட்டி நேரலை ஒளிபரப்பு
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றுள்ளது. இந்தப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்திலும் இந்தப் போட்டியை நேரலையில் பார்க்கலாம்.
இந்தியா அணியின் செயல்திறன்
இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் இதுவரை தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும், இந்திய அணி தனது கடைசி அற்புதமான வெற்றிக்குப் பிறகு முழு நம்பிக்கையுடன் விளையாடப் போகிறது. நல்ல நிலையில் உள்ளது. ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் தொடரை கைப்பற்றும் எனத் தெரிகிறது. மூன்று போட்டிகளுக்குப் பிறகு, தொடர் இப்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இனி ஒவ்வொரு பந்தும், ஒவ்வொரு ரன்னும் மிக முக்கியமானதாக இருக்கும்.
தென் ஆப்பிரிக்கா அணியின் செயல்திறன்
கொல்கத்தாவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் அவசியமானது. தென்னாப்பிரிக்க அணி, முந்தைய போட்டியில் அடைந்த தோல்விக்குப் பிறகு, இந்த முக்கியமான போட்டியில் வெற்றிபெற கடுமையாக முயற்சிக்கும். டி20 தொடரில் நீடிக்க, செய் அல்லது மடி என்ற சூழ்நிலையில் தென்னாப்பிரிக்கா களம் இறங்க வேண்டியிருக்கும்.
ரசிகர்களின் மனநிலை
இந்த போட்டியை பொருத்தவரை ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் அதிகமாகவே உள்ளது. லக்னோ மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த விலை டிக்கெட்டுகளான ரூ. 500 டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. இது போட்டியின் மீதான பெரும் ஆர்வத்தைக் காட்டுகிறது.
லக்னோ எகனா ஸ்டேடியம் பிட்ச் நிலை
லக்னோவின் எகானா ஸ்டேடியத்திற்கான பிட்ச் ரிப்போர்ட் எப்போதுமே விவாதப் பொருளாக இருந்து வருகிறது. பிட்ச் மெதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும். இதுபோன்ற பிட்ச்களில் ரன்கள் எடுப்பது பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கலாம். குறிப்பாக பவர்பிளேவுக்குப் பிறகு மிடில் ஓவர்களில், பந்து பழையதாகும்போது பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாட வேண்டியிருக்கும். விக்கெட் எடுப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
லக்னோ வானிலை முன்னறிவிப்பு
தெளிவான வானிலை: போட்டி நடைபெறும் நாளில் வானிலை தெளிவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை பெய்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவு (0-10%). மேலும் போட்டியின் போது வெப்பநிலை சுமார் 18°C முதல் 24°C வரை இருக்கலாம். இது மாலை மற்றும் இரவு நேரப் போட்டிக்கு ஏற்ற சூழலை உருவாக்கும். காற்றின் ஈரப்பதம் குறைவாக இருக்கும் என்பதால், ஆட்டம் எவ்வித இடையூறும் இன்றி நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
இந்திய அணி வீரர்கள்
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர்.
தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்
எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டெவால்ட் பிரெவிஸ், டோனி டி சோர்சி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், மார்கோ ஜான்சன், குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டோனோவன் ஃபெரீரா (விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஓட்னியல் பார்ட்மேன், கேசவ் மகாராஜ், குவெனா மபாக்கா, லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே.
About the Author

Shiva Murugesan
Shiva Murugesan
…Read More