உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஜி.ஓ.ஏ.டி. (GOAT) இந்தியா டூர் என்ற பெயரில் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து சில விமர்சனங்கள் இருந்தாலும், தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறார்.
மெஸ்ஸியின் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் வந்தாரா வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்துக்கு இன்று சென்றிருந்தார். லியோனல் மெஸ்ஸியின் வருகையைச் சிறப்பிக்கும் விதமாக இந்த மையத்தில் உள்ள குட்டி சிங்கம் ஒன்றுக்கு, லியோனல் என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த பயணத்தின் முக்கிய தருணமாக, ஆனந்த் அம்பானியை மெஸ்ஸி சந்தித்து உரையாற்றினார். அந்த சந்திப்பின்போது ஆனந்த் அம்பானி, மெஸ்ஸிக்கு USD 1.2 மில்லியன் (சுமார் ரூ.10.9 கோடி) மதிப்புள்ள மிக அரிய ரிச்சர்ட் மில்லே (Richard Mille) கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கியதாக தகவல்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் வெறும் 12 வாட்ச் மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த கை கடிகாரம், மிகவும் பிரபலமானது.