தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய அணி, தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் எப்போது இந்திய ஜெர்சியில் களமிறங்குவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் ரோஹித் மற்றும் விராட் ஆகியோர் ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.
Add Zee News as a Preferred Source

இந்தியா – நியூசிலாந்து ஒருநாள் தொடர்
முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 11, 2026 (ஞாயிற்றுக்கிழமை) – இடம்: வதோதரா (பரோடா).
இரண்டாவது ஒருநாள் போட்டி: ஜனவரி 14, 2026 (புதன்கிழமை) – இடம்: ராஜ்கோட்.
மூன்றாவது ஒருநாள் போட்டி: ஜனவரி 18, 2026 (ஞாயிற்றுக்கிழமை) – இடம்: இந்தூர்.
இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி பகல் 1:30 மணிக்குத் தொடங்கும்.
ரோஹித் – விராட் ஃபார்ம்
சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விராட் கோலி முதல் இரண்டு போட்டிகளிலும் சதம் விளாசி (135 மற்றும் 102 ரன்கள்) தனது கிளாஸை நிரூபித்தார். ரோஹித் சர்மாவும் முதல் போட்டியில் 57 ரன்களும், கடைசி போட்டியில் 75 ரன்களும் எடுத்து தொடர் வெற்றிக்கு உதவினார். இதே ஃபார்முடன் அவர்கள் நியூசிலாந்து தொடரிலும் அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு பிறகு, இந்திய அணி 2027 உலகக்கோப்பையை நோக்கித் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. ரோஹித் மற்றும் விராட் ஆகியோரின் அனுபவம் அணிக்கு மிக முக்கியம் என்பதால், அவர்கள் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து கவனம் செலுத்துவார்கள். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்தவுடன், டி20 உலக கோப்பை, ஐபிஎல் தொடர் நடைபெறும் என்பதால் அடுத்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை ஜூன் மாதம் நடைபெறும் இங்கிலாந்து தொடரில் மட்டுமே இந்திய ஜெர்சியில் காண முடியும். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் நடைபெறவுள்ளது.
டி20 தொடர் விவரம்
முதல் டி20: ஜனவரி 21 (நாக்பூர்)
இரண்டாவது டி20: ஜனவரி 23 (ராய்ப்பூர்)
மூன்றாவது டி20: ஜனவரி 25 (கவுகாத்தி)
நான்காவது டி20: ஜனவரி 28 (விசாகப்பட்டினம்)
ஐந்தாவது டி20: ஜனவரி 31 (திருவனந்தபுரம்).
About the Author
RK Spark