மேக்னைட் மட்டும் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்ற நிலையில் நிசான் இந்திய சந்தையில் கிராவைட், டெக்டான் மற்றும் 7 இருக்கை கொண்ட டெக்டான் என மூன்று மாடல்களை அடுத்தடுத்து விற்பனைக்கு வெளியிட உள்ளது.
சென்னையின் ரெனால்ட் ஆலையில் தயாரிக்கப்பட உள்ள இந்த கார்கள் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்புள்ளது.
Nissan Gravite
ட்ரைபரின் நிசான் மாடலாக வரவிருக்கின்ற 7 இருக்கை கொண்ட பட்ஜெட் விலை கிராவைட் காம்பேக்ட் எம்பிவி மாடலை ஜனவரி 2026ல் உற்பத்தி நிலை மாடல் வெளியிடப்பட்டு விலை மார்ச் 2026ல் அறிவிக்கப்பட்டு டெலிவரி மார்ச் முதல் துவங்க உள்ளது. இதில் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டு 5-வேக மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதியுடன் விலை ரூ.6 முதல் 9 லட்சத்திற்குள் கிடைக்க உள்ளது.
Nissan Tekton
5 இருக்கை டஸ்ட்டர் அடிப்படையிலான 5 இருக்கை டெக்டான் எஸ்யூவி பிப்ரவரி 2026ல் வெளியிடப்பட்டு அதனை தொடர்ந்து விற்பனைக்கு அடுத்த இரு மாதங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள டீலர்களிடம் கிடைக்க துவங்கலாம். டெக்டானில், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இருக்கும் என்று தெரிகிறது. இது ஹூண்டாய் க்ரெட்டா, டாடா சியரா, எலிவேட், விக்டோரிஸ் மற்றும் கியா செல்டோஸ் போன்ற பிரபல நடுத்தர எஸ்யூவி கார்களுக்குக் கடும் போட்டியாக அமையும்.
Nissan 7-Seater Tekton
டெக்டானின் அடிப்படையிலான 7 இருக்கை கொண்ட எஸ்யூவி ஏற்கனவே சந்தையில் உள்ள போரியல் போல அமைந்திருக்க உள்ள இந்த மாடல் 2026 இறுதி அல்லது 2027 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஹைபிரிட் சார்ந்த பவர்டிரையின் ஆப்ஷனும் பெற வாய்ப்புள்ளது.
மேலும், நிசான் நிறுவனம் தனது டீலர்களின் எண்ணிக்கையை 150-லிருந்து 250-க்கும் மேலாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.