Former CSK Player Devon Conway Double Century: 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் சமீபத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக கடந்த நவம்பர் 15ஆம் தேதி அனைத்து அனைகளும் தாங்கள் விடுவித்த மற்றும் தக்கவைத்துக்கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தாங்கள் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. சென்னை அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த வீரர்களையும் விடுவித்தது. அதாவது தொடக்க ஆட்டக்காரராக இருந்த டெவான் கான்வே, பதிரானா, ரச்சின் ரவிந்திரா ஆகியோரை விடுத்து அதிர்ச்சி அளித்தது.
Add Zee News as a Preferred Source
Former CSK Player Devon Conway: டேவன் கான்வே இரட்டை சதம்
சிஎஸ்கே கழட்டிவிட்ட நட்சத்திரங்களை மினி ஏலத்தில் எடுத்துவிடும் என்ற எதிர்பார்ப்பையும் சுக்கு நூறாக உடைத்தது. இருப்பினும் நல்ல வீரர்களை தேர்வு செய்து ஆறுதல் அளித்தது. இந்த நிலையில், சிஎஸ்கே அணியால் கழட்டிவிடப்பட்ட டேவன் கான்வே இரட்டை சதம் அடித்து அசத்தி உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி நியூஸிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது அந்த சுற்றுப்பயணத்தில் கடைசி போட்டியான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்தான் கான்வே இரட்டை சதம் அடித்து தான் யார் என்று நிரூபித்துள்ளார்.
மவுண்ட் மவுங்கானுய் மைதானத்தில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. அந்த அணி தற்போது 400 ரன்களை கடந்து ரன்களை குவித்து வருகிறது. தொடக்க வீரர்களாக டாம் லாதம் மற்றும் டேவன் கான்வே களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை பந்தாடிய இந்த கூட்டணி சிறப்பாக விளையாடி முதல் விக்கெட் இழப்பிற்கு 323 ரன்களை குவித்தது.
NZ vs WI 3rd Test Devon Conway: செம ஃபார்மில் முன்னாள் சிஎஸ்கே வீரர்
கேப்டன் டாம் லாதம் 246 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் மறுபக்கம் இருந்த கான்வே தொடர்ந்து களத்தில் நிலைத்து இரட்டை சதமும் விளாசினார். 367 பந்துகளை எதிர்கொண்ட டேவன் கான்வே 31 பவுண்டரிகளுடன் 227 ரன்கள் எடுத்த நிலையிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். தற்போது 450 ரன்களை கடந்த நியூசிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்துள்ளது. களத்தில் சிஎஸ்கே-வால் கழட்டிவிடப்பட்ட மற்றொரு வீரர் ரச்சின் ரவீந்திரா மற்றும் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் டாம் பிளண்டெல் ஆகியோர் பேட்டிங் செய்து வருகின்றனர்.
Devon Conway Runs For CSK: சிஎஸ்கே அணிக்காக டேவன் கான்வே
சிஎஸ்கே அணியால் கழட்டிவிடப்பட்ட டேவான் கான்வே அந்த அணிக்காக 29 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1080 ரன்களை குவித்துள்ளார். இதில் 11 அரைசதங்கள் அடங்கும். டேவான் கான்வே கடந்த 2025 ஐபிஎல் சீசனில் மட்டுமே சரியாக விளையாடவில்லை. அதற்கு முன்பாக 2023 மற்றும் 2022ஆம் ஆண்டில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி மொத்தமாக 43.20 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Full List Of Chennai Super Kings Players: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, டெவால்ட் ப்ரீவிஸ், எம்எஸ் தோனி, உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் காம்போஜ், குர்ஜப்னீத் சிங், நாதன் எல்லிஸ், ஷ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்திரி, சஞ்சு சாம்சன், அகேல் ஹொசைன், பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா, மேத்யூ ஷார்ட், அமன் கான், சர்பராஸ் கான், மாட் ஹென்றி, ராகுல் சாஹர், சாக் ஃபோல்க்ஸ்.
About the Author
R Balaji