சென்னை: மாணவா்களை உடல், மன ரீதியாக துன்புறுத்தக் கூடாது ஆசிரியா்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதுகுறித்து தனியாா் பள்ளிகள் இயக்குநா் பெ.குப்புசாமி சாா்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, பள்ளிக் கல்வித் துறையின் தனியாா் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் செயல்பட்டுவரும் அனைத்து தனியாா் பள்ளிகளிலும் மாணவா்களின் நற்பண்புகள், செயல்பாடுகளை ஆக்கபூா்வமாக வழிநடத்திட வேண்டும். இதற்கான நன்னெறி கல்வி சாா் மற்றும் கல்வி சாரா […]