சென்னை: சென்னையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ரவிகுமார் என்ற தூய்மை பணியாளர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது மற்ற தூய்மை பணியாளர்கள் பத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து அவர்களை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளியிருப்பதை மன்னிக்க முடியாது என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் தூய்மை பணிகளை தனியாருக்கு தாரை வார்த்துள்ளதை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் கடந்த சில மாதங்களாக போராடி வருகின்றனர். தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட […]