நாஞ்சில் சம்பத்: `வேறு ஏதாவது இருக்குமானு தெரிஞ்சுக்கணுமா?' – ஈரோடு பரப்புரையில் பங்கேற்காதது ஏன்?

ஈரோட்டில் நடந்த தவெக-வின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அந்தக் கட்சியில் புதிதாகச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் கலந்து கொள்ளாதது குறித்து சமூக ஊடகங்களில் பலவிதமான தகவல்கள் உலா வருகின்றன.

‘கட்சியில் பரப்புரைச் செயலாளரா நியமிக்கப் பட்டார். இந்தக் கூட்டம் பரப்புரைக் கூட்டம் தானே? ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண் ராஜ் எல்லாரும் பேசினாங்க. கொங்கு ஏரியாவுல இருந்து கட்சிக்கு வந்தாலயும் அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததுல முக்கியப் பங்கு வகித்ததாலயும் செங்கோட்டையனும் வேனில் நின்னு பேசினார்.

ஆனா சம்பத்தும் முக்கியமான ஆள் இல்லையா? அதுவும் சிறந்த பேச்சாளர். ஆனா அவர் கட்சியில சேர்ந்த பிறகு நடக்கிற முதல் கூட்டத்துக்கு அவர் வரலைன்னா எப்படி? என்ன பிரச்னை தெரியலையே’ என்கிற ரேஞ்சுக்கு அங்கே விவாதங்கள்.

தவெகவுக்கு எதிரானவர்கள் இதைப் பிடித்துக் கொண்டு, ‘மரியாதை இல்லைனுதான் முன்பு இருந்த கட்சிகள்ல இருந்து வெளியேறினார். இப்ப இங்கயும் இதே நிலையா’ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

TVK Vijay
TVK Vijay

விதண்டாவாதம்

‘ஏன் ஈரோட்டுக்கு வரவில்லை’ என நாஞ்சில் சம்பத்தையே தொடர்பு கொண்டு கேட்டோம்.

”இது மாதிரி சின்ன விஷயங்களைக் கூட பெரிசு பண்ணி விவாதிக்கணுமா? டிவியில கூட விவாதிச்சாலும் விவாதிப்பாங்க போல.. அப்படி வந்தா அதுக்கு பேரு விவாதம் இல்ல, விதண்டாவாதம். இதையே வேலையாச் செய்திட்டிருப்பாங்க சிலர். அவங்களுக்கு பொழுது போகாது. அந்தக் கூட்டத்துக்கு முந்தைய நாள் பனையூர்ல நடந்த மீட்டிங்ல பேசினேன்.

ஈரோட்டுக் கூட்டம் குறுகிய காலத் திட்டமிடல்ல உருவானது. அதுக்கு முன்னாடியே என்னுடைய பயணம் திட்டமிடப் பட்டிருந்தது. அந்தப் பயணத்துல ஈரோடு கூட்டம் இல்லை. அங்க நான் வராததற்கு இதுதான் காரணம். வேறு ஏதாச்சும் பின்னணி இருக்குமான்னு தெரிஞ்சுக்கணுமா? அப்படின்னா அலசி ஆராயட்டும். அவங்க நேரம் தான் விரயமாகும்’ என முடித்துக் கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.