IPL 2026: LSG-ல் 9 பாஸ்ட் பவுலர்கள்.. லக்னோவின் பெஸ்ட் பிளேயிங் 11 இதுதான்!

19வது ஐபிஎல் தொடர் 2026ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. ஆனால் இப்போதில் இருந்தே அதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலம்தான். நவம்பர் 15ஆம் தேதி ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்துக்கொண்ட மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதே சமயம் சில முக்கிய வீரரகள் தங்கள் ஓய்வையும் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். இதனால் அவர்களுக்கு பதிலாக யாரை எடுக்கப்போகிறார்கள் போன்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. 

Add Zee News as a Preferred Source

Lucknow Super Giants: 2025 ஐபிஎல்லில் சொதப்பிய லக்னோ அணி 

அந்த வகையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சில முக்கிய வீரர்களை மினி ஏலத்தில் எடுத்தது. கடந்த 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக நடைபெற்ற மெகா ஏலத்தில் ரூ. 27 கோடிக்கு ரிஷப் பண்ட்டை அணிக்குள் கொண்டு வந்து அந்த அணியின் உரிமையாளர் சஞ்சிவ் கோயங்கா எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தார். ஆனால் அவர்களிடம் மிட்செல் மார்ஷ், பூரன் போன்ற வீரர்கள் இருந்தும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.  இதற்கு காரணமாக லக்னோ அணியில் வேகப்பந்து வீச்சு மிகவும் பலவீனமாக இருந்ததாக பார்க்கப்பட்டது. 

LSG Pace Attack: 9 வேகப்பந்து வீச்சாளர்கள் 

இந்த சூழலில், லக்னோ அணி ஹைதராபாத் அணியில் இருந்து முகமது ஷமியையும் மும்பை அணியிடமிருந்து அர்ஜுன் டெண்டுல்கரையும் டிரேட் மூலம் வாங்கினர். தற்போது ஷமி, அர்ஜுன் டெண்டுல்கர், மயங்க் யாதவ், மோஷின் கான், ஆன்ரிச் நார்ட்ஜே, ஆவேஷ் கான், ப்ரின்ஸ் யாதவ்  என மொத்தமாக 9 வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதனால் கடந்த சீசனில் இருந்த ஓட்டையை இந்த சீசனில் சரி செய்துவிட்டார்கள் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். 

LSG IPL Mini Auction Purchase: லக்னோ அணி ஏலத்தில் வாங்கிய வீரர்கள்

வனிந்து ஹசரங்கா (ரூ. 2 கோடி), அன்ரிச் நார்ட்ஜே (ரூ. 2 கோடி), முகுல் சவுத்ரி (ரூ. 2.60 கோடி), நமன் திவாரி (1 கோடி), அக்ஷத் ரகுவன்ஷி (ரூ. 2.20 கோடி), ஜோஷ் இங்கிலிஸ் (ரூ. 8.60 கோடி) ஆகியோரை மினி ஏலத்தில் வாங்கினர். ரவி பிஷ்னோய் இடத்தில் வனிந்து ஹசரங்காவை கொண்டுவந்துள்ளனர். அதேபோல் பேட்ஸ்மேன் ஜோஸ் இங்கிலிஸை வாங்கி இருக்கின்றனர். 

LSG Full Squad 2026: லக்னோ அணி தக்கவைத்துக்கொண்ட வீரரக்ளின் பட்டியல் 

அப்துல் சமத், ஆயுஷ் படோனி, ஐடன் மார்க்ரம், மேத்யூ பிரீட்ஸ்கே, ஹிம்மத் சிங், ரிஷப் பண்ட் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், ஷாபாஸ் அகமது, அர்ஷின் குல்கர்னி, மயங்க் யாதவ், அவேஷ் கான், மொஹ்சின் கான், மணிமாறன் சித்தார்த், டிக்வேஷ் ரதி, பிரின்ஸ் யாதவ், ஆகாஷ் சிங். முகமது ஷமி (SRH இலிருந்து வாங்கப்பட்டார்), அர்ஜுன் டெண்டுல்கர் (மும்பை அணியில் இருந்து வாங்கப்பட்டார்). வனிந்து ஹசரங்கா, அன்ரிச் நார்ட்ஜே, முகுல் சவுத்ரி, நமன் திவாரி, அக்ஷத் ரகுவன்ஷி, ஜோஷ் இங்கிலிஸ். 

LSG Best Playing XI For IPL 2026: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சிறந்த பிளேயிங் 11 

ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் & கேப்டன்), நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, ஹிம்மத் சிங்/முகுல் சவுத்ரி, அப்துல் சமாத், வனிந்து ஹசரங்கா, முகமது ஷமி, மயங்க் யாதவ், திக்வேஷ் ரதி, அவேஷ் கான்.

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.