டி20 உலகக் கோப்பை: Reserve வீரர்கள் அறிவிக்கப்படாதது ஏன்? காரணம் இதுதான்!

India Squad For T20 World Cup 2026: அடுத்த ஆண்டு அதாவது 2026 பிப்ரவரி மாதத்தில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் இத்தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அணிகளை 4 குரூப்களாக பிரித்துள்ளனர். இதில் இந்திய அணி ஏ குரூப்பில் உள்ளது. இதற்காக தீவிரமாக அனைத்து அணிகளும் தயார் ஆகியும் வருகிறது. இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 20) டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு ஆலோசித்து அறிவித்தது. 15 பேர் கொண்ட அணியை அறிவித்த பிசிசிஐ ரிசர்வ் வீரர்களை அறிவிக்கவில்லை. 

Add Zee News as a Preferred Source

Why reserve players not announced in Indian team for T20 World Cup: ரிசர்வ் வீரர்கள் அறிவிக்கப்படாதது ஏன்? 

பொதுவாக ஐசிசி போன்ற தொடருக்கு செல்லும்போது ரிசர்வ் வீரர்களை அழைத்துச் செல்வது வழக்கம். இந்த ரிசர்வ் அணியில் குறைந்தது 4 பேர் இருப்பார்கள். மெயின் அணியில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால், இந்த ரிசர்வ் வீரர்களை மாற்று வீரர்களாக பயன்படுத்துவார்கள். இந்த சூழலில், அணியில் இருந்து நிக்கப்பட்ட சுப்மன் கில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிசிசிஐ ரிசர்வ் வீரர்களை அறிவிக்கவில்லை. இது அனைவரது மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரர்கள் அறிவிக்கப்படாதது ஏன் என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. 

இதுபோன்ற ஐசிசி தொடருக்கு ரிசர்வ் வீரர்கள் அறிவிக்கப்படுவது வழக்கமானதுதான். ஆனால் இந்த டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுவதால் நாம் எப்போது வேண்டுமானாலும் மாற்று வீரர்களை தேர்வு செய்துக்கொள்ளலாம். இதனால்தான் இப்போது ரிசர்வ் வீரர்கள் அறிவிக்கப்படவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

Shubman Gill: சுப்மன் கில் ஏன் இடம் பெறவில்லை? 

டி20 அணிக்கு துணை கேப்டனாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சுப்மன் கில் 2026 டி20 உலகக் கோப்பையில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் சஞ்சு சாம்சன் அணியில் இருந்தாலும் அவருக்கு பிளேயிங் 11ல் இடமே கிடைக்காது என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுப்மன் கில் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடமே பிடிக்கவில்லை. இது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

இது தொடர்பாக விளக்கம் அளித்த பிசிசிஐ, சுப்மன் கில்லின் ஃபார்ம் தற்போது மோசமாக இருக்கிறது என்பதற்காக அவர் நீக்கப்படவில்லை. அவர் திறமையான வீரர் எப்போது வேண்டுமானாலும் ஃபார்மிற்கு திரும்புவார். இந்த முடிவு அணியின் காம்பினேஷனை மனதில் வைத்து எடுக்கப்பட்டதாகும். அதேசமயம் தொடக்க வீரரே விக்கெட் கீப்பராக இருக்கும்போது, கூடுதலாக ஒரு பவுலர் அல்லது ஆல் ரவுண்டர்களை எடுத்து செல்ல முடியும். இது போன்ற காரணங்களால்தான் கில் அணிக்குள் கொண்டுவரப்படவில்லை. அணியில் எடுக்காததால் அவர் சிறந்த வீரர் இல்லை என்று அர்த்தம் இல்லை. அவர் திறமையான வீரர் என்று அஜித் அகர்கர் விளக்கம் அளித்தார். 

India Sqad For T20 World Cup: 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி 

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், அக்சர் பட்டேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா. 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.