டி20 உலக கோப்பை அணியில் இடம் இல்லை! ருதுராஜ் செய்த செயல்! ரசிகர்கள் அதிர்ச்சி!

2026 டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் பல விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்த இந்திய அணி தேர்வு குறித்த சர்ச்சைகள் கிரிக்கெட் உலகில் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, சுப்மன் கில் நீக்கத்தை விட, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜித்தேஷ் சர்மா அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரத்தில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இன்ஸ்டாகிராம் பதிவிற்கு அளித்துள்ள பதில் தற்போது வைரலாகி வருகிறது.

Add Zee News as a Preferred Source

CSK Captain Ruturaj Gaikwad’s comment on RCB’s post on Jitesh Sharma.  pic.twitter.com/bwnCVxusPn

— Johns. (@CricCrazyJohns) December 21, 2025

நடந்தது என்ன?

சமீபத்தில் தென்னாப்பிரிக்க தொடரில் இடம் பெற்று இருந்த ஜித்தேஷ் சர்மா, உலகக்கோப்பை அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சஞ்சு சாம்சனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது விக்கெட் கீப்பராக அவர் இருப்பார் என்று நம்பப்பட்டது. ஆனால், தேர்வு குழுவினர் யாரும் எதிர்பாராத வகையில் ஜித்தேஷ் சர்மாவை நீக்கிவிட்டு, இஷான் கிஷனை அணியில் சேர்த்துள்ளனர். இஷான் கிஷன் சமீபத்திய உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஆர்சிபியின் பதிவு

ஜித்தேஷ் சர்மா நீக்கப்பட்டதை தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் அவர் அங்கம் வகிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டது. அதில், “துணிச்சலானவர். தைரியமானவர். புத்திசாலி. இந்த ஐபிஎல் தொடரில் டி20 ஃபார்மெட்டில் ஜித்தேஷின் சாகசங்களை பார்க்க காத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தது. இந்த பதிவை பார்த்த ருதுராஜ் கெய்க்வாட், அதில் சில எமோஜிகளை பதிலாக பதிவிட்டுள்ளார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெளிவாக இல்லாவிட்டாலும், ஜித்தேஷுக்கு ஆதரவாகவே அவர் ரியாக்ட் செய்திருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். ஒரு சக வீரராக தனது ஆதரவை வெளிப்படுத்தியதையே இது காட்டுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ருதுராஜ் நிலைமை என்ன?

உலகக்கோப்பைக்கான டி20 அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்கு திரும்பிய அவர், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுடன் விளையாடினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 4வது இடத்தில் களமிறங்கி சதம் விளாசியது அவருக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

சுப்மன் கில் நீக்கம்

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து துணை கேப்டன் சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளார். இதனால் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறிய இடைவெளிக்கு பிறகு ரிங்கு சிங் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அக்சர் படேல், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில் துணை கேப்டனாக செயல்பட உள்ளார். ஜித்தேஷ் சர்மா நீக்கம் மற்றும் இஷான் கிஷன் வருகை அணிக்கு எந்த அளவுக்கு பலம் சேர்க்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், ருதுராஜ் போன்ற வீரர்களின் ஆதரவு ஜித்தேஷுக்கு நிச்சயம் ஒரு ஆறுதலாக இருக்கும்.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல் (VC), இஷான் கிஷன் (WK), சஞ்சு சாம்சன் (WK), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.