‘யோகா, தியானத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்’ – குஜராத் முதல்-மந்திரி பேச்சு

காந்திநகர்,

குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற யோகா பயிற்சியாளர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-

“பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட ‘விக்சித் பாரத்’(வளர்ந்த இந்தியா)- 2047 என்ற இலக்கை, தியானம் மற்றும் யோகா மூலம் கட்டமைக்கப்பட்ட ஆரோக்கியமான, நோயற்ற வாழ்க்கை முறை கொண்ட சமுதாயத்தால் மட்டுமே அடைய முடியும்.

யோகா உடல் வலிமையை வளர்க்கிறது. தியானம் மன ஒருமைப்பாட்டை மேம்படுத்துகிறது. தியானத்தின் மூலம் பெறப்படும் வலுவான முடிவெடுக்கும் திறனில் இருந்தே யோகாவிற்கு தேவையான ஒழுக்கம் உருவாகிறது. தியானம் இந்தியாவின் பழங்கால மரபில் வேரூன்றிய வரம். இன்றைய வேகமான மற்றும் மன அழுத்தங்கள் நிறைந்த காலத்தில், மன அமைதிக்கு இது மிகவும் பொருத்தமானது.

இந்தியா உலகிற்கு ஆன்மீக வழிகாட்டுதலை வழங்கும் நாடு. பிரதமர் நரேந்திர மோடியால் யோகாவிற்கு உலகளாவிய அங்கீகாரம் வழங்கப்பட்டதன் காரணமாக, ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது.

மேலும், நோய்கள் மற்றும் உபாதைகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக இருக்க, யோகா, மூச்சுப்பயிற்சி மற்றும் தியானத்தை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். யோகா மற்றும் தியானத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.