Sreenivasan: "சினிமாவில் நுழைவதற்கு முன்பிருந்தே அவரது படங்களை…" – ஶ்ரீனிவாசன் குறித்து சூர்யா

உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஸ்ரீனிவாசன் நேற்று காலை காலமானார்.

திடீரென நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி அவருடைய உயிர் பிரிந்தது.

Sreenivasan
Sreenivasan

நடிகர், இயக்குநர், திரைக்கதையாசிரியர் எனப் பல்வேறு அவதாரங்களில் ஜொலித்தவர் ஸ்ரீனிவாசன்.

அவருடைய மறைவுக்கு மலையாளத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சூர்யாவும் நேரில் சென்று ஸ்ரீனிவாசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

அஞ்சலி செலுத்தியவர் செய்தியாளர்களிடம் ஸ்ரீனிவாசன் உடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர், “நான் ஸ்ரீனிவாசனின் மிகப் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன். சினிமாவில் நுழைவதற்கு முன்பிருந்தே அவரது படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.

ஸ்ரீனிவாசனின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

Suriya
Suriya

சூர்யா தற்போது வெங்கி அத்லூரி இயக்கத்தில் ‘சூர்யா 46’ படத்தில் நடித்து வருகிறார்.

அதோடு இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் தன்னுடைய 47-வது படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது எர்ணாகுளத்தில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.