பாகிஸ்தான் வீரரை திட்டிய CSK வீரர்.. களத்திலேயே சண்டை – வைரலாகும் வீடியோ!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை துபாயில் நடந்து முடிந்திருக்கிறது. டிசம்பர் 12ஆம் தேது தொடங்கி நடைபெற்று வந்த இத்தொடர் நேற்று (டிசம்பர் 21) முடிவடைந்தது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் நேபால், யுஏஇ, மலேசியா, வங்கதேசம் என 8 அணிகள் பங்கேற்று விளையாடியது. இத்தொடரின் அரையிறுதி போட்டியில் இலங்கை – இந்தியா, வங்கதேசம் – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தியும் பாகிஸ்தான் அணி வங்கதேச அணியை வீழ்த்தியும் இறுதி போட்டிக்கு முன்னேறின.

Add Zee News as a Preferred Source

Sameer Minhas: பாகிஸ்தான் வீரர் சமீர் மின்கஸ் அபாரம்

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான இறுதி போட்டி நேற்று (டிசம்பர் 21) நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சமீர் மின்கஸ் பவுலர்களின் பந்துகளை நாலாபுரமும் சிதரடித்தார். 113 பந்துகளில் 172 ரன்களை அடித்து அசத்தினார். இதில் 17 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்களும் அடங்கும். இவருக்கு அடுத்தபடியாக அக்மத் உசேன் 56, உஸ்மான் கான் 35 ரன்களையும் குவித்தனர். இந்திய அணியின் சார்பில், தீபேஷ் தேவேந்திரன் 3 விக்கெட்களை கைப்பற்றினார். ஹெனில் படேல் மற்றும் கிலன் படேல் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.

India Lost Asia Cup: 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி

இறுதியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 347 ரன்களை எடுத்தது. இதையடுத்து இந்திய அணி 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நிலையில், 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 191 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்சி மட்டுமே 26 ரன்கள் எடுத்தார். மாற்ற அனைவருமே 20 ரன்களுக்கு குறைவாக எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அலி ராசா 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இந்த நிலையில், இந்திய U19 கேப்டன் ஆயுஷ் மாத்ரே பாகிஸ்தான் வீரர் அலி ராசாவை கடுமையாக திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

Ayush Mhatre abused a pakistani player , What did he say in the last. pic.twitter.com/7bq6sDmy5C

— Vivek (@ivkev2006s) December 21, 2025

Ayush Mhatre vs Ali Raza: ஆயுஷ் மாத்ரே vs அலி ராசா – வைரலாகும் வீடியோ

தொடக்க வீரராக ஆயுஷ் மாத்ரே 6 பந்துகளை எதிர்கொண்டு 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அப்போது அலி ராசா வீசிய பந்தை எதிர்கொண்ட அவர் மிட் ஆஃப்பில் க்ளியர் செய்ய முயன்று ஃபர்ஹான் யூசுப்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஆக்ரோஷமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கோபமடைந்த ஆயுஷ் மாத்ரே அலி ராசாவை பதில் கொடுக்க அது வாக்குவாதமாக மாறியது. பின்னர் நடுவர்கள் முகமது கம்ருஸ்ஸாமானும் ரவீந்திர கோட்டஹாச்சியும் தலையீட்டு இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினர். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்திய ரசிகர்கள் மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் ஆகியோர் இந்த வீடியோவை பகிர்ந்து தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

Worst Performance By CSK Player: வெறும் 65 ரன்களை மட்டும் அடித்த ஆயுஷ் மாத்ரே

இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் வீரர் சமீர் மின்கஸ்தான் அதிக ரன்களை குவித்து இருக்கிறார். அவர் 5 போட்டிகளில் 471 ரன்களை விளாசி இருக்கிறார். இதில் 2 சதங்களும் அடங்கும். இந்திய வீரர்களில் அபிகியான் குண்டு 276 ரன்களும் வைபவ் சூர்யவன்சி 261 ரன்களும் குவித்திருக்கின்றனர். இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே வெறும் 65 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.