Suryakumar Yadav Latest News: டிசம்பர் 20ஆம் தேதி அன்று வரும் பிப்ரவரி நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. இந்த அணியில் டி20 அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த சுப்மன் கில் நீக்கப்பட்டார். அவரது பொறுப்பு அக்சர் படேலுக்கு வழங்கப்பட்டது. சுப்மன் கில்லின் பெயர் இடம் பெறாததற்கு தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் கொடுத்திருந்தாலும், அவரது மோசமான ஃபார்மே அவர் தேர்வாகததற்கு காரணம் என்ற கருத்து பரவலாக உள்ளது. இந்த நிலையில்தான் சுப்மன் கில்லை விட மோசமான மற்றும் இந்த ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் கம்மியான ரன்களை சேர்த்த சூர்யகுமார் யாதவிற்கு மட்டும் எப்படி பிசிசிஐ இடம் அளித்தது என்ற கேள்வியை ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளம் வாயிலாக முன்வைத்து வருகின்றனர்.
Add Zee News as a Preferred Source
Shubman Gill vs Suryakumar Yadav: கில்லை விட சூர்யகுமார் யாதவ் படுமோசம்
இந்தியா டி20 அணியின் வருங்கால கேப்டன் என போற்றப்பட்ட சுப்மன் கில் 2025ஆம் ஆண்டில் 15 போட்டிகளில் விளையாடி 291 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். இதில் அவர் ஒரு அரைசதத்தை கூட அடிக்கவில்லை. ஆனால் சூர்யகுமார் யாதவ் அவரை விட மிகவும் மோசமாக இந்த ஆண்டில் செயல்பட்டுள்ளார். அதாவது 2025ஆம் ஆண்டில் சூர்யகுமார் யாதவ் மொத்தமாக 19 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் அவர் வெறும் 218 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். இவரும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதிகபட்ச ஸ்கோர் வெறும் 47 மட்டுமே. 9 முறை சிங்கில் டிஜிட் ரன்னில் ஆட்டமிழந்திருக்கிறார்.
இவர்கள் இருவரில் புள்ளிவிவரங்கள்படி பார்க்கையில் சுப்மன் கில்லை விட சூர்யகுமார் யாதவ்தான் படுமோசமாக விளையாடி இருக்கிறார். இருப்படி இருக்கையில், சுப்மன் கில் மட்டும் அணியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? சூர்யகுமார் யாதவுக்கு மட்டும் கூடுதல் வாய்ப்பு கொடுக்கப்படுவது ஏன்?
Suryakumar Yadav: சூர்யகுமார் யாதவ் மட்டும் தப்பித்தது எப்படி?
சூர்யகுமார் யாதவ், இந்த ஆண்டில் பெரிதாக ரன்களை குவிக்கவில்லை. ஆனால் அவரது கேப்டன்சி மிகவும் சிறப்பாக இருந்திருக்கிறது. அவர் கேப்டனாக வந்த பின்னர் இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்துள்ளது. பெரிய அணியுடன் கூட தொடரை இழக்கவில்லை. இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என அனைத்து தொடர்களிலும் வெற்றி. ஆசிய கோப்பையில் தோல்வியே அடையாமல் கோப்பையை வென்று அசத்தியது. இப்படி தனிப்பட்ட முறையில் சூர்யகுமார் யாதவ் சறுக்கினாலும் தலைமை பொறுப்பில் கலக்கி இருக்கிறார்.
BCCi Hope Suryakumar Yadav: பிசிசிஐ நம்பிக்கை
அதேபோல் களத்தில் பந்தை எதிர்கொள்ளும் விதம் என அவரது அணுகுமுறை சுப்மன் கில்லை காட்டிலும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. பேட்டிங்கில் டெக்னிக் சார்ந்த எந்த பிரச்சனையும் இல்லை என அணி நிர்வாகம் நம்புகிறது. இது போன்ற காரணங்களே சூர்யகுமார் யாதவ் நீக்கப்படாததற்கு காரணம். குறிப்பாக அவரின் தலைமை பொறுப்பில் உள்ள நம்பிக்கையே அவரை உலக கோப்பைக்கு கொண்டு சென்றிருக்கிறது. அவருக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பை பிசிசிஐ வழங்கி இருக்கிறது.
Last Chance For Suryakumar Yadav: சூர்யகுமார் யாதவுக்கு எச்சரிக்கை
ஆனால் சூர்யகுமார் யாதவ் வரும் காலங்களில் கண்டிப்பாக சிறப்பாக செயல்பட்டாக வேண்டும். இல்லையென்றால், டி20 உலக கோப்பைக்கு பின்னர் அவரது கேப்டன்சி ஏன் அவரது இடத்திற்கே பிரச்சனை ஏற்படலாம். இது அவருக்கு கிட்டத்தட்ட வாழ்வா சாவா வாய்ப்புதான்.
India Squad For 2026 T20 World Cup: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், அக்சர் பட்டேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா.
About the Author
R Balaji