ரிஷப் பண்ட் IND டி20, ஒருநாள் அணியில் தொடர்ந்து நிராகரிக்கப்படுவது ஏன்? முழு விவரம்!

Rishabh Pant Latest News: இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ரிஷப் பண்ட். இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாலமே உள்ளன. சொல்லப்போனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதிரடியான பேட்டிங்கிற்கு கிரிக்கெட் பார்க்கும் அனைவருமே ரசிகர்கள்தான். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு மேலான இந்திய அணிக்காக விளையாடி வரும் இவர் பல அசத்தலான வெற்றிகளுக்கு பங்களித்துள்ளார். ஆனால் சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே தொடர்ந்து விளையாடி வருகிறார். ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் கிடைக்காமலேயே உள்ளது. எதிர் வரும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் இவரது பெயர் இடம் பெறவில்லை. 

Add Zee News as a Preferred Source

Amit Misra about Rishabh Pant: ரிஷப் பண்ட் குறித்து அமித் மிஸ்ரா

இந்த நிலையில், ரிஷப் பண்ட் டெஸ்ட் தவிர மற்ற வடிவ கிரிக்கெட்டில் தேர்வாகாதது குறித்து முன்னாள் வீரர் அமித் மிஷ்ரா பேசி இருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர், ரிஷப் பண்ட் ஒரு திறமை மிக்க வீரர். அவர் நிச்சயம் தனது ஆட்டத்தின் போக்கை மாற்றி அமைக்க வேண்டும். அவர் மீது எனக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. ரிஷப் பண்ட்டை தற்போது இளம் வீரர் என கூற முடியாது. அவர் 2018ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

Rishabh Pant: ரிஷப் பண்ட் பிடிவாதம் பிடிக்கக்கூடாது 

அனுபவம் கொண்டுள்ள அவர் தனது ஆட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். எதிரணி உங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. அவர்கள் உங்களுக்கு எதிராக திட்டமிட்டு வருகிறார்கள். எந்த பந்தை அடிப்பீர்கள். எதை டிபன்ஸ் செய்வீர்கள் என அனைத்தையும் கவனித்து வருகிறார்கள். எனவே நீங்களும் அதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். நான் ஒரே மாதிரியாக அவுட் ஆவேன் என சொல்லிக்கொண்டே இருக்கக்கூடாது. அதனை நீங்கள் கட்டாயமாக தவிர்த்து உங்களின் திட்டங்களை புதிது புதிதாக வகுத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு ஷாட் உங்களுக்கு சில பிட்ச்சில் பலனலிக்கவில்லை என்றால் அதை ஆடாதீர்கள். நீங்கள் எப்போதும் பிடிவாதம் பிடித்து கொண்டே இருக்க முடியாது. 

Performance Suited To The Situation Is Needed: களத்திற்கு ஏற்ற ஆட்டம் தேவை 

எப்போது பவுண்டரிகள், சிக்சர்கள் அடிக்கும் பிட்சாக மட்டும் அனைத்து களங்களும் இருக்காது. சில பிட்ச்கள் சூழலுக்கு சாதகமாகவும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும். அங்கு நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள். உங்களின் அனுகுமுறை எப்படி இருக்கிறது என்பதே முக்கியம். இவ்வாறு அமித் மிஸ்ரா கூறினார். 

Rishabh Pant Future: ரிஷப் பண்ட்டின் எதிர்காலம்

ரிஷப் பண்ட் இடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே நிரந்தரமாக உள்ளது. டி20 மற்றும் ஒருநாள் அணியில் தனக்கான இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் அதற்கான செயல்பாட்டை கண்டிப்பாக செய்து தன்னை நிரூபிக்க வேண்டும். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து ஆடி தன்னால் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் என்பதை அவர் தனது பேட் மூலம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் வரும் காலங்களில் ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பிடிக்க முடியும். ரிஷப் பண்ட் இதுவரை 31 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 76 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் அவர் முறையே 871 ரன்கள் மட்டும் 1209 ரன்களை அடித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 8 அரைசதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.