இந்திய டி20 அணியின் வருங்கால கேப்டன் இவர்தான்..சுப்மன் கில் இல்லை -முழு விவரம்!

இந்திய டி20 அணியின் கேப்டனாக தற்போது சூர்யகுமார் யாதவ் இருக்கிறார். கடந்த 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு பின்னர் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி எந்த டி20 தொடரில் தோற்கவில்லை. மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வரும் 2026 டி20 உலகக் கோப்பைக்கும் இவரது தலைமையில் இந்திய அணி அமைக்கப்பட்டுள்ளது. 

Add Zee News as a Preferred Source

Shubman Gill: துணை கேப்டன் பதவில் இருந்து நீக்கப்பட்ட சுப்மன் கில் 

இந்த அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளார். இதனால் அக்சர் படேல் மீண்டும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2025ஆம் ஆண்டில் சூர்யகுமார் யாதவ் ரன் குவிப்பதில் சொதப்பி இருந்தாலும், கேப்ட்னசியில் அசத்தி இருப்பதன் காரணத்தினால் அவர் மீது நம்பிக்கை கொண்டு டி20 உலகக் கோப்பைக்கு அனுப்புகிறது பிசிசிஐ. இந்த நிலையில், 2026 டி20 உலகக் கோப்பைக்கு பின்னர் புதிய கேப்டன் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் தற்போது சூர்யகுமார் யாதவ்-க்கு வயது 35 ஆகிறது. கிட்டத்தட்ட தனது கரியரின் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டதால் இந்திய அணி நிர்வாகம் அடுத்த கேப்டனை தேடும். 

Hardik Pandya: இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் 

தற்போது வரை, இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ்-க்கு அடுத்ததாக சுப்மன் கில்தான் அடுத்த கேப்டன் என பேசப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது உள்ள தகவல்படி அடுத்த கேப்டன் சுப்மன் கில்லை என தகவல் வெளியாகி உள்ள அதே நேரத்தில், ஹர்திக் பாண்டியாதான் அடுத்த கேப்டன் என கூறப்படுகிறது. பேட்டிங்க், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தும் ஹர்திக் பாண்டிய இந்திய அணியின் தூனாக விளங்குகிறார். எனவே இவரே அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்திய அணியை வழி நடத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது. 

India’s Best All Rounder: சிறந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா

தற்போது 32 வயதாகும் ஹர்திக் பாண்டிய இன்னும் குறைந்தது 4, 5 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் நிச்சயம் விளையாடுவார். எனவே சூர்யகுமார் யாதவ்-க்கு பின்னர் இவரை கேப்டனாக நியமித்து அதன்பின் அடுத்த கேப்டனை தேடும் முடிவில் பிசிசிஐ இருப்பதாக கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா இதுவரை 124 டி20 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில், அதில் அவர் 2002 ரன்களையும் 101 விக்கெட்டையும் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

India Squad For T20 World Cup: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.