இங்கிலாந்து அணி அவர்களின் பரம கிரிக்கெட் எதிரான ஆஸ்திரேயாவ்வுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்து முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலுமே ஆஸ்திரேலியா அணி வென்று ஆஷஸ் தொடரை ரிடைன் செய்துள்ளது. மீதம் வரும் இரண்டு போட்டிகளை இங்கிலாந்து அணி வென்றாலும் எந்த பயனும் இல்லை. இதற்கு காரணம் அந்த அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தான் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Add Zee News as a Preferred Source
England Bazball Strategy: மெக்கல்லம் கையில் எடுத்த பேஸ்பால் யுக்தி
பிரண்டன் மெக்கல்லம் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர் பேஸ்பால் முறையை கையில் எடுத்தது. இதுதான் அவர்களுக்கு மிகப்பெரிய எதிராக மாறி இருக்கிறது. இந்த புதிய உக்தியை கையில் எடுத்த ஆரம்பகட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. முதல் 11 போட்டிகளில் 10 போட்டிகளில் வென்றது. இதனால் இந்த யுக்தி வேலை செய்கிறது என நினைத்து அதை தொடர்ந்து செயல்படுத்தினர். இதனால் உஷாரான மற்ற அணிகள் இங்கிலாந்துக்கு எதிராக நிதானமாக விளையாடி வெற்றி பெற்றனர்.
Brendon McCullum: பிரண்டன் மெக்கல்லம் நீக்கம்?
இதன் காரணமாக அடுத்த 33 போட்டிகளில் 16 வெற்றிகளை மட்டுமே பெற்றது இங்கிலாந்து அணி. முன்னாள் வீரர்கள் முதல் பலரும் இந்த முறையை கைவிட வேண்டும் என்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை டெஸ்ட் கிரிக்கெட் போல் ஆட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். ஆனால் இங்கிலாந்து அணி காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. நடந்து வரும் ஆஷஸ் தொடரையும் தற்போது இழந்துள்ளனர். இந்த சூழலில்தான், ஆஷஸ் தொடர் முடிவடைந்ததும் பிரண்டன் மெக்கல்லம் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது.
Ravi Shastri: இங்கிலாந்து பயிற்சியாளராக செல்லும் ரவி சாஸ்திரி?
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் கூறி உள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தும் யுக்தி யாருக்கு தெரியும் என யோசித்து பார்க்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் பலவீனத்தை அறிந்த ஒருவருக்குதான் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி கிடைக்க வேண்டும்.
என்னை கேட்டால் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என கூறுவேன். அவரது தலைமையில்தான் இந்திய அணி இரண்டு முறை ஆஸ்திரேலியாவை அவர்களது மண்ணிலேயே வீழ்த்தி வெற்றி பெற்றது என மாண்டி பனேசர் கூறி உள்ளார். இந்த நிலையில், ரவி சாஸ்திரி இங்கிலாந்து தலைமை பயிற்சியாளராக செல்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை பெரும்பாலும் முன்னாள் இந்திய வீரர்கள் பெரிய அணிகளின் தலைமை பயிற்சியாளராக சென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji